மட்ட பாடலில் முதலில் நடிக்க இருந்த நடிகை… அட இவங்களா? இப்படி மிஸ்ஸாச்சே!

by Akhilan |   ( Updated:2024-09-14 03:36:42  )
மட்ட பாடலில் முதலில் நடிக்க இருந்த நடிகை… அட இவங்களா? இப்படி மிஸ்ஸாச்சே!
X

Trisha

GoatMovie: விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான கோட் திரைப்படத்தில் மட்ட பாடலில் முதலில் நடிக்க இருந்த நடிகை குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியிருக்கிறது.

கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்திருக்கும் திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். சித்தார்த் நூனி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.

இதையும் படிங்க: அஜித் வாங்கிய ஆடம்பர ரேஸ் கார்… 3 நொடியில் 100 கி.மீ. வேகம்… எத்தனை கோடி தெரியுமா…?

விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், சினேகா, அஜ்மல், பிரேம்ஜி, லைலா உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் இப்படத்தில் முக்கிய இடத்தில் நடித்திருந்தனர். விஜய் அப்பா மற்றும் மகன் என இருவேடங்கள் ஏற்றிருந்தார். இப்படத்தில் விஜய் தன்னுடைய நடிப்பை பெரிய அளவில் மெருகேற்றி இருந்ததும் குறிப்பிடப்பட்டது.

அதிலும் முக்கியமாக மகன் விஜயாக இளவயது கேரக்டரை கொடூர வில்லத்தனத்துடன் சரியாக செய்திருப்பார். இதுவே படத்திற்கு மிகப்பெரிய அளவில் பிளஸ் பாயிண்டாக அமைந்தது. இது மட்டுமல்லாமல் படத்தின் தொடக்கத்தில் வரும் விஜயகாந்தின் ஏஐ ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறது.

Srileela

தொடர்ந்து பிரபலங்கள் சிவகார்த்திகேயன், திரிஷா ஆகியோரின் கேமியோ எண்ட்ரியும் ரசிகர்களிடம் அப்ளாசை அள்ளியது. ஆனால் இவர்கள்தான் முதல் தேர்வு என்பது இல்லை. முதலில் சிவகார்த்திகேயன் கேரக்டருக்கு வெங்கட் பிரபு கேட்டது தன்னுடைய கடைசி திரைப்பட ஹீரோவான சிம்புவைதான். ஆனால் அவர் தன்னுடைய படங்களில் பிஸியாக இருப்பதால் அவருக்கு பதில் நடிகர் எஸ் கே உள்ளே வந்திருக்கிறார்.

இதையும் படிங்க: என்னய்யா கடைசியில் இப்படி பண்ணிட்டீங்க… ஏமாந்த விஜய் ரசிகர்கள்… தளபதி 69 படத்தின் அப்டேட்..?

அதுபோலவே மட்ட திரைப்பட பாடலில் முதலில் வெங்கட் பிரபு ஹீரோயின் ஸ்ரீலீலாவை தான் அணுகி இருக்கிறார். மகேஷ் பாபு நடிப்பில் வெளியான குண்டூர் காரம் திரைப்படத்தில் நடிப்பால் அசத்திய ஸ்ரீ லீலா மடத்தப்பட்டி பாடல் மூலம் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

அந்த புகழை பயன்படுத்திக் கொள்ள நினைத்த வெங்கட பிரபு அவரை கேட்க ஆனால் ஸ்ரீலீலா ஒற்றை பாடலுக்கு நடனமாட விருப்பம் இல்லாததால் முடியாது என மறுத்துவிட்டாராம். அதைத் தொடர்ந்து நடிகை திரிஷாவை அந்த பாடலில் ஆடவைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தற்போது அப்பாடல் மிகப்பெரிய அளவில் கிட் கொடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story