More
Categories: Cinema News latest news

முதல் நாளே அண்ணனுக்கும் தம்பிக்கும் முட்டிக்கிச்சு… ராயன் படப்பிடிப்பில் நடந்த தரமான சம்பவம்

செல்வராகவன் இயக்கத்தில் நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் நடித்தவர் எஸ்.ஜே.சூர்யா. இப்போது அவரது தம்பி தனுஷ் இயக்கும் ராயன் படத்திலும் நடித்து வருகிறார்.  தனுஷ், ராயன், செல்வராகவன் என 3 டைரக்டர்களும் ராயன் படத்தில் வருகிறார்கள். இதுபற்றி எஸ்.ஜே.சூர்யா தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

செல்வராகவனைப் பொருத்தவரை இப்படித்தான் பர்பார்மன்ஸ் வேணும். இப்படித்தான் இருக்கணும்னு பாடி லாங்குவேஜையும் கவனிப்பார். ஆனால் ராயன் படத்தில் முதல் நாள் சூட்டிங். செல்வராகவன் மாட்டி விட்டார். அவர் ஒரு ஸ்டைல்ல பண்ணிட்டாரு. ஆனா இவரு ஒரு ஸ்டைல்ல வேணும்னு கேட்குறார். என்ன தான் இருந்தாலும் டேய் நான் பண்ணிட்டேன். என்னைத் திருப்பிக் கேட்குறன்னு கேட்க முடியாது. முன்னாடி இருக்குறது தம்பியா இருந்தாலும் அவரு டைரக்டர்.

அதான் ஆடியோ ரிலீஸ்ல அதைப் பற்றி செல்வராகவன் சொல்லியிருப்பார். தம்பிக்கிட்ட மட்டும் சின்ன வயசில ஏதாவது வச்சிக்காதீங்க. பின்னாடி வச்சி செஞ்சிருவான். செஞ்சிடுவேன்கற மாதிரி செஞ்சிடுவான். அப்படி ஒரு லெஜண்டரி டைரக்டர் வந்து தன் முன்னாடி இருக்குறது தம்பியாகவே இருந்தாலும் அவரு டைரக்டர் என்பதால் அவருக்கு வேண்டிய மாதிரி எளிமையா நடிச்சாரு.

SJSDSR

இவரும் வந்து அண்ணனே என்றாலும் விட்டுக்கொடுக்காம தனக்கு வேண்டியதை வாங்கிக்கிட்டாரு. ரொம்ப சுவாரசியமாக இருந்தது. இதுக்கு முன்னால ஒரு தடவை தனுஷ் இயக்கத்தில் நான் நடிப்பதாக இருந்தது. அது பாதியிலே நின்னு போச்சு. அதே மாதிரி இதுவும் நடந்துடக்கூடாதுன்னு நினைச்சேன். ஆனாலும் எந்த வித தடங்கலும் இல்லாம இப்போ ரெடியாயிடுச்சு.

அது தடங்கலா இருந்தாலும் மனிதர்களின் சக்திக்கு அப்பாற்பட்டு சில விஷயங்கள் எல்லாம் இருந்தது. அதுலயே என்னோட லுக் என எல்லாவற்றையும் ரசித்துச் செய்தார். இந்தப் படத்துல எனக்கு சுருட்டை தலைமுடியை அவரே உட்கார்ந்து தயார் பண்ணினார். காஸ்டியூம் கூட ரொம்ப கவனிச்சி செய்தார்.

ஒரு ஆக்டர்னா டாப்புக்குப் போகணும்னு அந்த எண்ணமே வராது. நம்ம படம் நல்லாருக்கணும்னு தான் நினைப்பார். டைரக்ஷன் அவ்ளோ ஈசி கிடையாது. நடிகன்னா அவனுக்கு எல்லாமே இருக்கணும். கரெக்டா உணவு எடுத்துக்கணும். அவன் கேமரா முன்னாடி வந்தா எல்லாரும் அவனுக்காக வரணும்.

ஆனா டைரக்டருக்கு அப்படி இல்ல. ஒழுங்கா சாப்பிட முடியாது. எல்லாத்தையும் தேர அலகுக் குத்தி கட்டி இழுத்துக்கிட்டுப் போகணும். அந்த மாதிரி அவங்களோட உழைப்பு இருக்கும். தனுஷ் டைரக்ஷனுக்கு 99 மார்க் கொடுக்கலாம். நான் விரும்பறது வந்து அவரு நடிகரா தொடர்வது. நான் அவரு ஏன் இப்படி டைரக்டரா கஷ்டப்படுறாருன்னு நினைப்பேன். அதனால அவரு டைரக்ட் பண்றதை விரும்பல. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Published by
sankaran v