Blue Star: பா.ரஞ்சித்தின் நீலம் ப்ரடக்ஷன் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ப்ளூ ஸ்டார். இந்தப் படத்தில் அசோக்செல்வன், சாந்தனு, ப்ரித்வி, கீர்த்தி பாண்டியன் போன்ற பிரபலங்கள் நடித்திருந்தனர். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இரு ஊர்களுக்கிடையே நடக்கும் கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து இயக்குனர் இந்த கதையை படமாக்கியிருக்கிறார். இந்தப் படத்தின் மூலம் சாந்தனுவுக்கும் ப்ரித்விக்கும் ஒரு நல்ல எதிர்காலமே அமைந்து விட்டது என்று சொல்லலாம்.
Also Read
இதையும் படிங்க: ஜெமினியை நேருக்கு நேராக எதிர்த்துப் பேசிய சாவித்ரி!.. சந்திரபாபுதான் எல்லாத்துக்கும் காரணமா?
இருவருமே ஒரு நல்ல வாய்ப்புக்காக போராடிக் கொண்டிருந்த நேரத்தில் ப்ளூ ஸ்டார் திரைப்படம் அவர்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். இந்த நிலையில் அசோக் செல்வன் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தவர் நடிகர் கவினாம்.
இயக்குனர் இந்த கதையை முதலில் கவினிடம் சொல்ல கவினுக்கு மிகவும் பிடித்துப் போயிருந்ததாம். ஆனால் அவருக்கு கால்ஷீட் பிரச்சினை காரணமாக ஏகப்பட்ட படங்களில் பிஸியாக இருந்ததனால் இந்த வாய்ப்பு அசோக் செல்வனுக்கு சென்றிருக்கிறது.
இதையும் படிங்க: வாய்ப்பு கேட்ட விஜயகாந்த்.. சொல்லிக் கொடுத்த ராமராஜன்!.. இருவருக்கும் இடையில் இப்படி ஒரு உறவா?!..
ஏற்கனவே கவினும் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நிலையில் அவருடைய அடுத்த ஹிட் லிஸ்ட்டில் ப்ளூ ஸ்டார் திரைப்படமும் வந்திருக்க வேண்டியது. ஆனால் மிஸ் ஆகிவிட்டது. இப்போது கவின் கைவசம் ஏகப்பட்ட படங்களை வைத்திருக்கிறார். அடுத்ததாக டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கத்திலும் ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் கவின். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறாராம்.



