தமிழ் சினிமாவில் வெளிவந்த முதல் மல்டி ஸ்டார்களை கொண்ட படம்… பொன்னியின் செல்வனுக்குலாம் முன்னோடி இதுதான் போல…
தமிழ் சினிமாவில் சமீப காலத்தில் “விக்ரம்”, “பொன்னியின் செல்வன்” போன்ற மல்டி ஸ்டார்களை கொண்ட திரைப்படங்கள் வெளிவருகின்றன. ரஜினிகாந்த் நடித்து வரும் “ஜெயிலர்” திரைப்படத்தில் கூட மோகன் லால், சிவ ராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.
தற்போது இது போன்ற மல்டி ஸ்டார்களை கொண்ட படங்கள் அதிகமாக உருவாகி வருகின்றன. குறிப்பாக பேன் இந்தியா என்ற கான்செப்ட் பிரபலமானதில் இருந்து இந்த டிரெண்ட் வளர்ந்து வருவதாக கூட கூறலாம்.
இந்த நிலையில் “பொன்னியின் செல்வன்”, “ஜெயிலர்” போலவே மல்டி ஸ்டார்களை கொண்ட திரைப்படம் ஒன்று பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் சினிமாவில் வெளிவந்திருக்கிறது. அத்திரைப்படம் குறித்து இப்போது பார்க்கலாம்.
1958 ஆம் ஆண்டு கே.சோமு இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் சம்பூர்ண ராமாயணம். இத்திரைப்படம் ராமாயணத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படமாகும்.
இத்திரைப்படம் அக்காலகட்டத்தில் மாபெறும் வெற்றி பெற்ற திரைப்படமாக அமைந்தது. இதில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் என்.டி.ராமாராவ் ராமராக நடித்திருந்தார். அதே போல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பரதனாகவும் அக்காலகட்டத்தில் முன்னணி நடிகராக திகழ்ந்த பி.வி.நரசிம்ம பாரதி லட்சுமணனாகவும் நடித்திருந்தார்.
இதையும் படிங்க: இப்படி ஒரு காரணத்துக்காகவா பத்மினி எம்.ஜி.ஆர் படத்தையே உதறித்தள்ளுனாரு?? என்னப்பா சொல்றீங்க!!
இதில் சீதாவாக பத்மினி நடித்திருந்தார். இவ்வாறு அக்காலகட்டத்தில் திகழ்ந்த டாப் நடிகர்கள் இதில் நடித்திருந்தனர். ஆதலால் “சம்பூர்ண ராமாயணம்” திரைப்படம் தமிழ் சினிமாவின் முதல் மல்டி ஸ்டார்களை கொண்ட திரைப்படமாக இருக்கலாம் என பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார்.