Cinema News
‘தல’ங்கிற பேர் யாருக்கு வரவேண்டியது தெரியுமா? அசால்ட்டா தட்டி தூக்கிய அஜித்.. இது தெரியாம போச்சே
Actor Ajith: இன்று ஒட்டுமொத்த ரசிகர்களும் அஜித்தை செல்லமாக அன்பாக தல தல என்றே அழைத்து வருகிறார்கள் என்றால் அதற்கு முக்கியகாரணம் தீனா படம்தான். அந்தப் படத்தில் தான் முதன் முதலில் அஜித்தை மகாநதி சங்கர் தல என்று அழைக்கும் சீன் இருக்க அதிலிருந்தே அஜித் ரசிகர்கள் அஜித்தை தல என்று கூப்பிட ஆரம்பித்தார்கள். இன்றுவரை அஜித் பெயர் தல என்றுதான் மாறியிருக்கிறது.
ஆனால் தீனா படத்தில் முதலில் அஜித்துக்கு பதிலாக வேறொரு சூப்பர் ஹீரோ நடிக்க இருந்ததாகவும் சில பல காரணங்களால் அந்த ஹீரோ நடிக்காமல் போனதாகவும் அதன் பிறகே அஜித் இந்தப் படத்திற்குள் வந்தார் என்றும் ஒரு தகவல் போய்க் கொண்டிருக்கிறது. அந்த ஹீரோ மட்டும் நடித்திருந்தால் இந்நேரம் அஜித்துக்கு தல என்ற பெயர் வந்திருக்குமா? என்று இந்த செய்தியை பார்த்த அனைவரும் கூறி வருகிறார்கள்.
இதையும் படிங்க: பிரசாந்துக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்த தியாகராஜன்!. அட இவ்வளவு நடந்திருக்கா!..
அந்த ஹீரோ வேறு யாருமில்லை. நடிகர் பிரசாந்த்தான். முதலில் முருகதாஸ் பிரசாந்தைதான் தீனா படத்தில் நடிக்க கேட்டாராம். ஆனால் அந்த நேரத்தில் பிரசாந்த் பொன்னர் சங்கர் என்ற ஒரு ஹிஸ்டாரிக்கல் படத்தில் நடித்துக் கொண்டிருக்க தீனா படத்தில் நடிக்காமல் போனதாம். தீனா படம் மட்டுமல்லாமல் அஜித் நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திலும் பிரசாந்த்தான் நடிக்க வேண்டியதாம்.
ஆனால் பொன்னர் சங்கர் படத்திற்காக பிரசாந்த் கிட்டத்தட்ட 5 வருடங்கள் வேறு எந்த படத்திலேயும் ஒப்பந்தம் ஆகாமல் மிகவும் கஷ்டப்பட்டாராம். 2006 ஆம் ஆண்டுமுதல் 2011 வரை பொன்னர் சங்கர் படத்தில் மாட்டிக் கொண்டாராம் பிரசாந்த். அதனாலேயே பல நல்ல நல்ல படங்கள் பிரசாந்தை விட்டு சென்றது என்றும் அவருடைய அந்த க்ரேஷும் இதனால்தான் பாதிப்பானது என்றும் அவரது தந்தை தியாகராஜன் கூறினார்.
இதையும் படிங்க: அவருக்கு முன்னாடி நான் போயிடனும்… உருக்கமாக சொன்ன ரஜினிகாந்த்.. யாரிடம் தெரியுமா?
இப்போது கோட் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பிரசாந்தின் கேரக்டரும் மிகவும் வலுவான கேரக்டராம். அதனால்தான் பிரசாந்த் கோட் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டாராம். மேலும் ஏற்கனவே அவர் நடித்த அந்தகன் திரைப்படமும் வெளியாக முடியாமல் திணறி வருகிறது. ஒரு நல்ல நாளில் அந்தகன் படத்தை ரிலீஸ் செய்ய காத்துக் கொண்டிருப்பதாக தியாகராஜன் கூறினார்.