சம்பளமா இவ்வளவு கொடுங்க போதும்!.. அப்ரானியா கேட்ட ரஜினி!.. ஆடிப்போன தயாரிப்பாளர்...

rajini
கர்நாடகாவில் இருந்து நடிக்கும் ஆசையில் சென்னைக்கு வந்து நடிப்பு கல்லூரியில் பயிற்சி பெற்று பாலச்சந்தரால் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் சிறிய வேடத்தில் அறிமுகமாகி, வில்லனாக நடிக்க துவங்கி அப்படியே ஹீரோவாக மாறி பின்னர் சூப்பர்ஸ்டாராகவும் மாறியவர் நடிகர் ரஜினிகாந்த். ஹீரோ ஆவதற்கு முன் பல படங்களில் குணச்சித்திர வேடத்திலும் நடித்தார். தனக்கென ஒரு தனி ஸ்டைலை உருவாக்கி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தவர்.

rajini
இன்றுவரை இவரின் சூப்பர்ஸ்டார் பட்டத்தை யாராலும் எடுத்துக்கொள்ள முடியவில்லை. இன்னும் சொல்லப்போனால் அவரின் பட்டத்திற்குதான் இப்போது நடிகர்கள் போட்டி போட்டு வருகின்றனர். 72 வயது ஆகியும் சினிமாவில் ஆக்டிவாக ரஜினி நடித்து வருகிறார். தற்போது நெல்சன் இயக்கதில் ‘ஜெயிலர்’ என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.

Jailer
கடந்த பல வருடங்களாகவே ரஜினி பல கோடி சம்பளம் வாங்கி வருகிறார். தமிழ் சினிமாவில் முதலில் ரூ.100 கோடி சம்பளம் பெற்ற நடிகராக இருக்கிறார். ஆனால், நடிக்க துவங்கிய போது ரஜினி வாங்கிய சம்பளம் மிகவும் குறைவு. பாராதிராஜா இயக்கத்தில் உருவான 16 வயதினிலே படத்திற்கு ரஜினி வாங்கிய சம்பளம் ரூ.3 ஆயிரம் மட்டுமே.; அதிலும் 500 பாக்கி வைத்தார் பாரதிராஜா. அதன்பின் நிறைய படங்கள் நடித்து ஹீரோவாக மாறிய பின்னரும் அவர் வாங்கிய சம்பளம் 30 ஆயிரத்திற்கு கீழேதான்.

rajini
கதாசிரியர் பஞ்சு அருணாச்சலம் பற்றி ஒரு பிரத்யோக வீடியோ ஒன்றில் பேசியுள்ள ரஜினி ‘ என்னை நடிகராக்கியது பாலச்சந்தர் எனில், என்னை நட்சத்திரமாக மாற்றியது பஞ்சு அருணாச்சலம்தான். அவரின் கதைகளில் நடித்துதான் நான் மக்களின் மனதில் இடம் பிடித்தேன். ஒருமுறை என்னிடம் வந்த அவர் பிரியா என்கிற படம் எடுக்கப்போவதாகவும் அப்படத்தின் படப்பிடிப்பு சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து ஆகிய பகுதிகளில் நடக்கவுள்ளது.
நீதான் ஹீரோ உனக்கு என்ன சம்பளம்? எனக்கேட்டார். நான் 30 ஆயிரம் வாங்கி வருகிறேன். வெளிநாடுகளிலெல்லாம் படப்பிடிப்பு நடப்பதால் எனக்கு 15 ஆயிரம் கொடுங்கள் போதும் என்றேன். அவர் அதிர்ச்சி அடைந்தார். நீ இவ்வளவு சம்பளம்தான் வாங்குகிறாயா?. நீ நடிக்கும் படங்களின் வியாபாரம் என்னவென உனக்கு தெரியுமா?.. இதையெல்லாம் சொல்ல உன்னிடம் ஆட்கள் இல்லையா?.. இந்த படத்திற்கு உனக்கு ஒரு லட்சம் சம்பளம் தருகிறேன். வேண்டாம். ஒரு லட்சத்தி பத்தாயிரம் தருகிறேன் என சொன்னார். எனக்கு லட்ச ரூபாய் சம்பளம் கொடுத்தது பஞ்சு அருணாச்சலம் சார்தான்’ என அந்த வீடியோவில் ரஜினி உருகி பேசியுள்ளார்.
இதையும் படிங்க: இந்த நிகழ்ச்சியில் கமல் கலந்து கொள்ள போகிறாரா?.. ரசிகர்களுக்கு செம ட்ரீட் வைத்த உலகநாயகன்..