Vijayakanth: நினைச்சு பார்க்க கூட முடியல! விஜயகாந்துக்கு ஜோடி ஷில்பா ஷெட்டியா? என்ன படம் தெரியுமா?

Published on: January 30, 2026
shilpa
---Advertisement---

தமிழ் சினிமாவில் 90கள் காலகட்டத்தில் ஃபேமிலி ஆடியன்ஸை ஈர்க்கும் வகையில் பல நல்ல நல்ல படங்கள் வெளியாகிக் கொண்டே வந்தன. அப்போதெல்லாம் ஆக்‌ஷனுக்கு இடமே இருக்காது. தேவைப்படும் இடத்தில்தான் ஆக்‌ஷன் இருக்கும். மற்றபடி நாம் நாள்தோறும் எதிர்க்கொள்ளும் பிரச்சினைகள், சூழ் நிலைகள் இவைகளை சுற்றித்தான் படமே எடுத்திருப்பார்கள்.

அதனால்தான் என்னவோ அந்தப் படங்கள் எல்லாமே நம்முடன் கனெக்ட் ஆகும்படியே இருந்திருக்கின்றன. சென்டிமென்ட், எமோஷன், ஆக்‌ஷன், காமெடி இதெல்லாம் சேர்ந்துதான் ஒரு படமாகவே வெளியாகும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் படமுழுக்க ஆக்‌ஷன் , வெட்டுக்குத்து, அடிதடி இது இருந்தால்தான் ரசிகர்கள் படங்களை பார்க்கவே வருகிறார்கள். செண்டிமெண்ட் இருந்தால் இதெல்லாம் ஒரு படமா என்று கேட்டுவிட்டு தியேட்டரை விட்டு வெளியேறி விடுகிறார்கள்.

அப்படிப்பட்ட காலகட்டத்தில் நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அப்படி 90கள் காலகட்டத்தில் நம்மை குடும்பம் குடும்பமாக கொண்டாட வைத்த படங்களில் மிகவும் குறிப்பிடத்தக்க படம் என்றால் வானத்தை போல படத்தை சொல்லலாம். விக்ரமன் இயக்கத்தில் விஜயகாந்த் டபுள் கேரக்டரில் நடித்திருப்பார். மீனா ஜோடியாக நடித்திருப்பார். ஆனால் மீனாவுக்கு முன்னாடி அந்தப் படத்தில் கமிட் ஆனவர் ஷில்பா ஷெட்டியாம்.

விக்ரம் படத்தில் நடிக்கலாமா வேண்டாமா என முதலில் குஷ்புவிடம்தான் ஷில்பா ஷெட்டி கேட்டிருக்கிறார். ஹீரோயின்களை மிக அழகாக காட்டக் கூடிய இயக்குனர், முக்கியத்துவம் கொடுப்பார். தாராளமாக நடிக்கலாம் என குஷ்பு சர்ட்டிஃபிக்கேட் கொடுத்த பிறகே ஷில்பா ஷெட்டி மும்பையில் இருந்து கிளம்பிவந்தாராம். வந்து போட்டோஷுட் எல்லாம் எடுத்திருக்கிறார்கள்.

ஆனால் படத்தின் தயாரிப்பாளரான ஆஸ்கார் ரவிக்கு ஷில்பா ஷெட்டி பொருத்தமாக இல்லை என்று ஃபீல் செய்திருக்கிறார். அதன் பிறகு ரோஜாவை கேட்ட போது அதற்கு ரவி வேண்டாம் என சொல்லி அவர்தான் மீனாவை கமிட் செய்தாராம். ஆனால் எதிர்பார்த்ததையும் விட மீனா அந்தப் படத்தில் அழகாக நடித்திருந்தார் என விக்ரமன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.