Categories: Cinema History latest news

இந்திய சினிமாவின் முதல் நட்சத்திர தம்பதிகள்!..அடடே இவர்களா?..

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என சொல்லி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் சினிமாவில் திருமணங்கள் அவர்கள் நினைத்த மார்க்கத்தில் முடிந்து விடுகின்றன.

ஏராளமான நட்சத்திர தம்பதிகளை சினிமாவில் நாம் பார்த்திருக்கிறோம். பாக்யராஜ்-பூர்ணிமா, பார்த்திபன் – சீதா, ராமராஜன் – நளினி, இன்றைய காலகட்டத்தில் சூர்யா- ஜோதிகா, அஜித் – ஷாலினி என அனைவருமே தான் நடித்த படங்களின் மூலம் காதல் வையப்பட்டு திருமணம் செய்து கொண்டவர்கள்.

இதையும் படிங்கள் : சில்க் ஸ்மிதாவிற்கு அறிவுரை வழங்கிய மக்கள் திலகம்!..அப்படி என்ன சொன்னாரு தெரியுமா?..

இப்படி நட்சத்திர தம்பதிகளாக தமிழ் மொழியில் மட்டுமில்லாது பிறமொழி சினிமாக்களிலும் நடக்கின்றன. இது எங்கு இருந்து ஆரம்பமானது என்று பார்த்தால் 20, 30 களில் இருந்தே இந்த முறை வந்து கொண்டு தான் இருக்கின்றன. இந்திய சினிமா வரலாற்றில் முதலில் நட்சத்திர தம்பதிகளாக ஜொலித்தவர்கள் பியு.சின்னப்பா- சகுந்தலா ஜோடிதானாம்.

நாடகத்துறையில் வல்லவரான பியு.சின்னப்பா பல படங்களில் நடித்தாலும் அவர் நடித்து பெரும் வெற்றிப்படமாக அமைந்தது சந்திரகாந்தா, மற்றும் உத்தமபுத்திரன் படம். இவரின் வெற்றியினால் இப்ப உள்ள அஜித், விஜய் ரசிகர்கள் மாதிரி அந்த காலங்களில் சின்னப்பா ரசிகர்களும் பாகவதர் ரசிகர்களும் மோதிக்கொள்வார்களாம். அதன் பின் பிரிதிவிராஜ் படத்தில் பிரிதிவிராஜாவாக சின்னப்பா, சம்யுக்தையாக சாகுந்தலா நடித்தனர். இதில் ஏற்பட்ட காதலால் தான் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் தான் முதல் நட்சத்திர தம்பதிகளாக இருக்கலாம் என என சித்ரா லட்சுமணன் தெரிவித்தார்.

Published by
Rohini