suriya47
தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகராக கருதப்படும் சூர்யா தற்போது அவரது 47 வது படத்தின் படப்பிடிப்பு வேலையில் இறங்கியிருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ரெட்ரோ. அந்தப் படம் கலவையான விமர்சனத்தை பெற்று வசூலிலும் எதிர்பார்த்த வகையில் அமையவில்லை. அதற்கு முன் வெளியான கங்குவா படமும் மோசமான அனுபவத்தை சூர்யாவிற்கு தந்தது.
பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் கங்குவா. ஆனால் போட்ட முதலீட்டையே அந்தப் படம் எடுக்கவில்லை. அடுத்தடுத்து தோல்விப்படங்களை கொடுத்து வரும் சூர்யா தற்போது ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்ற படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படாததை ஒட்டி இன்று அவரது 47வது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியிருக்கிறது.
சூர்யாவின் 47வது படத்தை ஆவேசம் பட இயக்குனர் ஜித்து மாதவன் இயக்குகிறார். படத்தில் நஸ்ரியா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். மேலும் பிரேமலு பட நடிகர் நஸ்லேனும் நடிக்கிறார். படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைக்கிறார். அந்தப் படத்திற்கான பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு படக்குழுவினருடன் ஜோதிகா மற்றும் சூர்யாவின் தாயும் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் சூர்யா 47 படத்தின் கதை முதலில் வேறொரு நடிகருக்கு சொல்லப்பட்டிருக்கிறது. அவர் வேறு யாருமில்லை. நடிகர் மோகன்லால். அதன் பிறகு அது கைவிடப்பட்டிருக்கிறது. மோகன்லால் விலகியதும் படத்தின் ஸ்கிரிப்ட்டில் சில மாற்றங்கள் செய்திருக்கிறார்கள். ஆனால் நடிகர்கள் யாரும் மாறவில்லை என்றும் தெரிகிறது. அதனால் மோகன்லால் நடிக்க வேண்டிய படம் என்பதால் ஒரு வெயிட்டான கதையாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்திலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார் சூர்யா அந்தப் படத்தின் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்த நிலையில் அடுத்த வருடம் சம்மர் விடுமுறையில் அந்தப் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு பக்கம் தமிழ்பட இயக்குனர், இன்னொரு பக்கம் தெலுங்கு பட இயக்குனர் , இன்னொரு பக்கம் மலையாள பட இயக்குனர் என சூர்யா ஒரு பேன் இந்தியா பிஸியான நடிகராக மாறியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…