தமிழின் முதல் “A” சர்ட்டிஃபிகேட் படம்… அதுவும் எம்.ஜி.ஆர்தான் ஹீரோ… அப்படி என்ன காரணமா இருக்கும்??

by Arun Prasad |   ( Updated:2022-10-26 08:36:41  )
MGR
X

MGR

இந்திய சினிமாக்களை பொறுத்தவரை U, U/A, A, S போன்ற தணிக்கைச் சான்றிதழ்கள் தணிக்கை குழுவினரால் வழங்கப்படுகின்றன. ஒரு திரைப்படத்தின் வகையராக்களுக்கு ஏற்றவாறோ அல்லது அதில் இடம்பெறும் காட்சிகளுக்கு ஏற்றவாறோ இந்த சான்றிதழ் வழங்கப்படுகிறது.

CBFC

CBFC

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எந்த வயதினரும் பார்க்கக்கூடிய திரைப்படங்களுக்கு “U” சான்றிதழ் வழங்கப்படும். 12 வயதுக்கும் மேல் உள்ளவர்கள் தங்களது பெற்றோர்களின் வழிகாட்டுதலுக்கு உட்பட்டு பார்க்கக்கூடிய திரைப்படங்களுக்கு “U/A” சான்றிதழ் வழங்கப்படும்.

திரைப்படங்களில் வசை வார்த்தைகள், பாலியல் உறவு சம்பந்தப்பட்ட காட்சிகள், ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகள் போன்றவை அதிகம் இடம்பெற்றிருந்தால் அத்திரைப்படங்களுக்கு “A” சான்றிதழ் வழங்கப்படும். அப்படி “A” சான்றிதழ் வழங்கப்பட்டால் அத்திரைப்படங்களை 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் பார்ப்பதற்கு ஏற்றது அல்ல என பொருள்படும். இந்த நிலையில் தமிழ் சினிமாவில் “A” சான்றிதழ் வாங்கிய முதல் திரைப்படத்தை குறித்து இப்போது பார்க்கலாம்.

Marmayogi

Marmayogi

1951 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர், அஞ்சலி தேவி, மாதுரி தேவி ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “மர்மயோகி”. இத்திரைப்படம் எம்.ஜி.ஆரின் சினிமா பயணத்திலேயே முக்கிய திருப்புமுனையாக திகழ்ந்த திரைப்படம் ஆகும்.

ராஜா காலத்தில் நடப்பது போன்ற கதை அம்சம் கொண்ட இத்திரைப்படத்தில் அந்த காலக்கட்டத்தில் யாரும் அதுவரை பார்த்திராத மிகவும் பயங்கரமான சண்டைக் காட்சிகள் இடம்பெற்றிருந்தனவாம். ஆதலால்தான் இத்திரைப்படத்திற்கு தணிக்கை குழுவினர் “A” சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். எனினும் இத்திரைப்படம் அந்த காலக்கட்டத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

Next Story