Connect with us

Cinema History

வெளிநாட்டில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம்… இந்த சாதனையை செய்தது யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் முதல்முறையாக வெளிநாட்டில் படமாக்கப்பட்ட தமிழ் படம் எது தெரியுமா… அந்தப் படத்துக்கு எம்.ஜி.ஆர் – சிவாஜி இடையே ஒரு இணைப்பு இருக்கிறது.

இன்று கோலிவுட்டில் படத்தின் ஷூட்டிங்குக்காக வெளிநாட்டுக்குச் செல்வது என்பது சாதாரணம். அதேபோல், முழுக் கதையும் வெளிநாட்டிலேயே நடப்பதுபோல் எல்லாம் கதைகள் வந்திருக்கின்றன. ஆனால், ஒரு காலத்தில் வெளிநாட்டு ஷூட்டிங் என்பதே இல்லை. அப்படி முதல்முறையாக வெளிநாட்டில் ஷூட் செய்யப்பட்ட படம் சிவந்த மண். சிவாஜி, முத்துராமன், காஞ்சனா, நாகேஷ், தேங்காய் சீனிவாசன் என முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடித்திருந்தனர்.

இயக்குநர் எஸ்.வி.ஸ்ரீதரே இயக்கி தயாரித்த இந்தப் படம் 1969-ம் ஆண்டு வெளியானது. இதில், இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால், அன்று சிந்திய ரத்தம் என்கிற பெயரில் இதே கதையை எம்.ஜி.ஆரை வைத்து ஸ்ரீதர் ஏற்கனவே ஷூட் செய்திருந்தார். ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆருக்கும் ஸ்ரீதருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படவே, படம் அப்படியே நின்றிருக்கிறது. அதன்பின்னர், சிவாஜி கணேசனுக்கு ஏற்றவகையில் திரைக்கதையில் சிறிய மாற்றங்கள் செய்து சிவந்த மண் என்கிற பெயரில் ஷூட்டிங்கைத் தொடங்கினார் ஸ்ரீதர். இந்தப் படத்துக்காகத்தான் முதன்முதலில் வெளிநாடு பறந்தது கோலிவுட் படக்குழு.

இதையும் படிங்க: அடுக்கடுக்கான கேள்விகளுக்கு துள்ளி விளையாடும் தமிழில் சொல்லி அசத்திய சிவாஜிகணேசன்

தமிழ் படம்

படத்தின் பாடல்கள் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஆல்ப்ஸ் மலை போன்ற பல இடங்களில் படமாக்கப்பட்டன. பார்வை யுவராணி பாடல் புகழ்பெற்ற ஈஃபிள் கோபுரத்தில் ஷூட் செய்யப்பட்டது. எம்.எஸ்.வி இசையில் பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டடித்தன.

google news
Continue Reading

More in Cinema History

To Top