Connect with us
Mangamma Sabatham

Cinema History

கோடி ரூபாய் வசூல் ஆன தமிழின் முதல் படம்… அப்போவே இவ்வளவு கலெக்சனா?? அடேங்கப்பா!!

தமிழ் சினிமாவில் இப்போதெல்லாம் 100 Crore Club என்ற வார்த்தை மிகவும் சகஜமாக ஆகிவிட்டது. ஆனால் 1940களிலேயே ஒரு தமிழ் திரைப்படம் பல கோடி ரூபாய்கள் சம்பாதித்துள்ளது. அவ்வாறு அக்காலகட்டத்தில் அதிக வசூல் ஆன முதல் திரைப்படமாக அத்திரைப்படம் அமைந்துள்ளது. அவ்வாறான அத்திரைப்படத்தை குறித்து இப்போது பார்க்கலாம்.

Mangamma Sabatham

Mangamma Sabatham

வசுந்தரா, ரஞ்சன், என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரின் நடிப்பில் 1943 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “மங்கம்மா சபதம்”. இத்திரைப்படத்தை ஜெமினி ஸ்டூடியோ எஸ் எஸ் வாசன் தயாரித்திருந்தார். ஆச்சார்யா என்பவர் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

“மங்கம்மா சபதம்” திரைப்படத்தை மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்திருந்தாராம் எஸ்.எஸ்.வாசன். பின்னாளில் மிகப் பிரம்மாண்ட படைப்பான “சந்திரலேகா” திரைப்படத்தை தயாரிப்பதற்கு ஊக்கமாக இத்திரைப்படம் அமைந்ததாம்.

Gemini SS Vasan

Gemini SS Vasan

“மங்கம்மா சபதம்” திரைப்படத்தை இயக்கிய ஆச்சார்யா, ஹாலிவுட் திரைப்படங்களை விரும்பி பார்ப்பவர் என்பதால், மிகவும் நெருக்கமான காதல் காட்சிகளை உருவாக்கினாராம். இது போன்ற நெருக்கமான காட்சிகள் பல இருந்ததினால் இத்திரைப்படம் வெளியானபோது பல எதிர்மறையான விமர்சனங்கள் வந்ததாம்.

எனினும் “மங்கம்மா சபதம்” திரைப்படம் வெளியானபோது பிரம்மாண்டமான வெற்றியை பெற்றதாம். இந்த வெற்றியை தொடர்ந்து இத்திரைப்படத்தை தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் படமாக்கினாராம் எஸ்.எஸ்.வாசன்.

இதையும் படிங்க: புதுமுக நடிகைக்கு பெயர் வைக்கச்சொல்லி அடம்பிடித்த இயக்குனர்… பாரதிராஜாவின் ராசியால் டாப் ஹீரோயின் ஆன சம்பவம்…

Mangamma Sabatham

Mangamma Sabatham

குறிப்பாக தமிழ்நாட்டில் “மங்கம்மா சபதம்” திரைப்படம் அக்காலகட்டத்திலேயே கிட்டத்தட்ட 40 லட்ச ரூபாய் லாபத்தை ஈட்டுத்தந்தாம். இது இன்றைய மதிப்புப்படி பல கோடி ரூபாய்கள் வரும். இத்தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தனது வீடியோ ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top