க்யூட்னஸ் அள்ளுது!. ஜெயிலர் பாட்டுக்கு குழந்தைகளுடன் ரீல்ஸ் போட்ட நயன்!.. வைரல் வீடியோ!...

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு ஆண்குழந்தைகள் உள்ளனர். இதுவரை அந்த குழந்தைகளின் முகத்தை காட்டாமலேயே இருந்து வந்தார் நயன்.

ஆனால் இப்போது முதன் முறையாக அந்த குழந்தைகளுடன் சேர்ந்து ரீல்ஸ் வீடியோவாக தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் நயன். இரண்டு குழந்தைகளும் சும்மா லட்டு மாதிரி மிகவும் அழகாக இருக்கின்றன.

இதையும் படிங்க: சொந்த படத்துக்கு மட்டும் தான் வருவேன்!.. ஷாருக்கானுக்கே விபூதி அடித்த நயன்தாரா.. பிரியாமணி தான் கடைசியா!..

மேலும் ஜெய்லர் படத்தில் அமைந்த அலப்பறை கிளப்புறோம் என்ற பாடலுக்கு ரீல்ஸ் போட்டு அந்த வீடியோவை பதிவிட்டிருக்கிறார். இதன் மூலம் முதன் முதலாக இன்ஸ்டா பக்கத்தில் தனது குழந்தைகளுடன் என்ரி ஆகியிருக்கிறார் நயன்தாரா.

அந்த வீடியோவில் நயன் மற்றும் இரண்டு குழந்தைகளும் வெள்ளை நிற உடையில் கூலிங் க்ளாஸ் அணிந்து கொண்டு பார்க்கவே அற்புதமாக இருக்கிறது. இதுவரை காட்டாத நயன் இன்று தன் குழந்தைகளை மீடியா முன் காட்டியிருப்பது ரசிகர்களுக்க்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே இன்று நயன் நடித்த ஜவான் திரைப்படத்தின் டிரெய்லரும் வெளியாகி விருந்து படைத்திருக்கிறது.

அந்த டிரெய்லரில் நயன் போலீஸ் வேடத்தில் கெத்தா வந்து இறங்குவது போல காட்சிகள் இருக்கின்றது. அதை பார்க்கும் போதே புல்லரிக்குது. இதில் இந்த ரீல்ஸ் வீடியோவாலும் மேலும் மேலும் ஷாக்கை கொடுத்திருக்கிறார் நயன்.

இதோ அந்த வீடியோ : https://www.instagram.com/reel/CwmSYSIBRzn/?igshid=MTc4MmM1YmI2Ng==

 

Related Articles

Next Story