Categories: Cinema News Entertainment News latest news

தமிழ் சினிமாவிலேயே முதல் முறை –  ஒரு மணி நேர சண்டை காட்சியுடன் விக்ரம்!

நாளை திரையரங்குகளில் விக்ரம் திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் பல்வேறு விதமான எதிர்ப்பார்ப்புகளை ஏற்படுத்தி வரும் படமாக விக்ரம் இருந்து வருகிறது.

ஹாலிவுட்டில் மார்வெல் சினிமாஸ் ஒன்றுக்கொன்று அனைத்து திரைப்படங்களுக்கும் தொடர்பை ஏற்படுத்தி மார்வெல் யுனிவர்ஸ் என்கிற கான்செப்டை கொண்டு வந்தது. அதே போல லோகேஷ் கனகராஜ் தனது திரைப்படங்களை கோர்த்து லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸை உருவாக்க இருக்கிறாரோ. என்று ரசிகர்களிடையே வாதங்கள் போய்க்கொண்டுள்ளன.

அதற்கு ஏற்றாற் போல கைதி திரைப்படத்திற்கும், விக்ரமிற்கும் தொடர்புண்டு என்கிற செய்தி வெளியாகியுள்ளது.

vikram kamal

இந்த நிலையில் விக்ரம் படம் குறித்து லோகேஷ் கனகராஜ் கூறும்போது, ”விக்ரம் படம் ஒரு பயங்கரமான கேங்ஸ்டர் படமாக இருக்கும். முடிந்த வரை அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. படத்தில் முதல் பாதியை விட இரண்டாம் பாதி மிக நீளமானது. மேலும் படத்தில் 1 மணி நேரத்திற்கு நான்ஸ்டாப் சண்டை காட்சிகள் உள்ளது” எனக் கூறியுள்ளார் லோகேஷ்.

எனவே இது ஃபேமிலி ஆடியன்ஸ்க்கு பிடித்த படமாக இருக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

Published by
Rajkumar