வடிவேலு அப்படி திட்டியும் கேப்டன் என்ன செய்தார் தெரியுமா?!.. நீண்ட நாள் ரகசியத்தை பகிர்ந்த பிரேமலதா..
தமிழ் சினிமாவில் வடிவேலு விஜயகாந்த் கூட்டணி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ஒரு கூட்டணி. திரையிலும் சரி திரைக்கு பின்னாடியும் சரி பல கலை நிகழ்ச்சிகளில் வடிவேலுவும் விஜயகாந்தும் சேர்ந்து மக்களை ரசிக்க வைத்திருக்கிறார்கள்.
ஆனால் விஜயகாந்த் அரசியலுக்கு வந்த பிறகு அவரையே எதிர்த்து தரக்குறைவாக வடிவேலு பேசியது அனைவர் மத்தியிலும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதுதான் வடிவேலுவுக்கு சினிமாவில் விழுந்த முதல் அடியாக அமைந்தது. கேப்டனையே இப்படி பேசுகிறாரே என்று அவருடன் நடித்த சக நடிகர்களே வடிவேலுவை விட்டு விலக ஆரம்பித்தனர்.
இதையும் படிங்க : அட்லீக்கும் ஷாருக்கானுக்கும் முதல் ஆப்பு ரெடி!.. லியோ டிக்கெட் புக்கிங் எப்போ ஆரம்பம் தெரியுமா?..
இதுதான் விஜயகாந்துக்கும் வடிவேலுவுக்கு இடையே ஏற்பட்ட விரிசலுக்கு காரணமாக அமைந்தது. இதை பற்றி ஏராளமானோர் பல பேட்டிகளில் கூறியிருக்கின்றனர். ஆனால் முதன் முறையாக பிரேமலதா விஜயகாந்த் சில விஷயங்களை பகிர்ந்தார்.
அதாவது மீண்டும் வடிவேலு விஜயகாந்தை பார்த்து பேசியதாகவும், தான் செய்த செயலுக்கு வருத்தம் கேட்டார் என்றும் செய்திகள் வெளிவந்தது. அது உண்மையா? என கேட்க, அதற்கு பிரேமலதா அப்படி ஒன்றும் நடக்கவே இல்லை என்றும் இதுவரை வடிவேலு கேப்டனை சந்திக்க வரவே இல்லை என்றும் கூறினார்.
இதையும் படிங்க : என்ன பெரிய நோலன் படம்!.. மாதவன் படம் பார்த்துருக்கீங்களா?.. ஹாலிவுட்டை அலற விட்ட ஏ.ஆர். ரஹ்மான்!..
அதுமட்டுமில்லாமல் இன்னொரு விஷயத்தையும் இன்று பதிவு செய்கிறேன் என கூறிய பிரேமலதா, வடிவேலுவுக்கும் கேப்டனுக்கும் இடையே பிரச்சினைகள் இருந்த போதும் கேப்டன் என்னிடம் ‘வடிவேலு ஒரு பிறவிக்கலைஞன்.. பல தயாரிப்பாளர்கள் அவருக்கு வாய்ப்புகள் கொடுக்க வேண்டும்’ என்று சொன்னவர். மேலும், அவருக்கு தெரிந்தவர்கள் பல பேரிடம் வடிவேலுவுக்காக கேப்டன் பேசியிருக்கிறார் என்றும் சினிமா அந்த மாதிரி ஒரு கலைஞனை இழந்து விடக் கூடாது என்றும் கூறினாராம். இதிலிருந்தே கேப்டன் எப்பேற்பட்டவர் என தெரிந்து கொள்ளலாம்’ என பிரேமலதா கூறினார்.