கருப்பு வெள்ளை சினிமா காலம் முதல் கலர் சினிமா வரை முன்னணி நடிகர்களாக இருந்தவர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி என்பது எல்லோருக்கும் தெரியும். எம்.ஜி.ஆர் ஆக்ஷன் கதைகளில் நடித்து பிரபலமானார். சிவாஜியோ நல்ல கதையம்சம் கொண்ட குடும்ப பாங்கான, செண்டிமெண்ட் காட்சிகள் நிறைந்த கதைகளில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இருவருக்குமான தொழில் போட்டி என்பது எப்போதும் இருந்தது.
அதேநேரம் சினிமா உலகை பொறுத்தவரை ஒவ்வொரு கால கட்டத்திற்கும் ஏற்ப போட்டி நடிகர், நடிகைகள் உருவாவது என்பது அப்போது முதல் இப்போது வரை தொடர்ந்து நடைபெறும் ஒன்றுதான். 1960 மற்றும் 70 களில் எம்.ஜி.ஆரும், சிவாஜியும் கோலிவுட் ஜாம்பாவான்களாக இருந்தனர். இவர்களுடன் இணைந்து நடிப்பதற்கு பல நடிகைகள் போட்டி போடுவார்கள். அதில் சிலர் எம்.ஜி.ஆருடனும், சிலர் சிவாஜியுடனும் நடிப்பார்கள். சிலர் இரண்டு பேருடனும் நடித்திருப்பார்கள்.
அப்போதெல்லாம் தொடர்ந்து பல படங்கள் அல்லது சில வருடங்களுக்கு ஒரு நடிகையை ஒரு பட நிறுவனம் ஒப்பந்தம் செய்துவிடும். எனவே, வேறு படங்களில் அந்த நடிகையால் நடிக்க முடியாமல் போகும். மறைந்த முதல்வரும் நடிகையுமான ஜெயலலிதா 1966ம் வருடம் முதல் 1970 வரை எம்.ஜி.ஆர் படங்களில் மட்டுமே நடித்தார். அதன்பின் எம்.ஜி.ஆருடன் மனக்கசப்பு ஏற்பட்டு 1971 முதல் 1975 வரை எம்.ஜி.ஆரின் ஒரு படத்தில் கூட அவர் நடிக்கவில்லை. அந்த 5 வருடங்கள் சிவாஜி, ஜெமினி கணேசன், முத்துராமன், ஜெய் சங்கர் உள்ளிட்ட நடிகர்களின் படங்களில் நடித்தார்.
அதேநேரம் சிவாஜியுடன் நடித்து எம்.ஜி.ஆருடன் நடிக்கமுடியாமல் போன ஐந்து நடிகைகள் இருக்கிறார்கள். ஸ்ரீதேவி, சுஜாதா, ஸ்ரீவித்யா, உஷா நந்தினி மற்றும் பிரமிளா ஆகியோர் சிவாஜி, ஜெமினி கணேசன், முத்துராமன் ஆகிய முன்னணி நடிகர்களுடன் நடித்தும் ஏனோ எம்.ஜி.ஆருடன் நடிக்கும் வாய்ப்பு இவர்களுக்கு வரவில்லை. இதில் ஸ்ரீதேவி மட்டும் சிறுமியாக இருக்கும்போது எம்.ஜி.ஆருடன் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Rajinikanth: அபூர்வ…
தமிழ்த்திரை உலகில்…
நடிகை கீர்த்தி…
புஷ்பா 2…
நடிகர் கவின்…