More
Categories: Cinema News latest news

கோடியை கொட்டி கொடுத்தாலும் அப்படி நடிக்க மாட்டேன்!.. ரூல்ஸ் போட்டு நடிக்கும் டாப் 5 நடிகர்கள்..

Movie actors: சினிமா நடிகர் என்றாலே பணம் கொடுத்தால் எப்படி வேண்டாமானாலும் நடிப்பார்கள். நடிகைகளுடன் எவ்வளவு நெருக்கமாகவும் நடிப்பார்கள் என ரசிகர்கள் பலரும் நினைக்கிறார்கள். ஆனால், எல்லோரும் அப்படி அல்ல. ஒரு கொள்கையோடு சினிமாவில் நடித்தவர்கள் பலரும் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட 5 நடிகர்கள் பற்றித்தான் இங்கே பார்க்க போகிறோம்.

எம்.ஜி.ஆர் தனது படங்களில் சிகரெட் பிடிப்பது போலவோ, மது அருந்துவது போலவோ அதை ஊக்குவிப்பது போலவோ நடிக்க மாட்டார். ஏனெனில், அவரை பார்த்து அவரின் ரசிகர்கள் கெட்டுபோய்விடக்கூடாது என்பதில் கடைசிவரை உறுதியாக இருந்தார். அதேபோல், கடவுளை கும்பிடுவது போலவோ, நெற்றியில் விபூதி வைத்துக்கொண்டே, கடவுளை பற்றி பேசுவது போன்ற காட்சிகளிலும் அவர் நடிக்க மாட்டார். ஏனெனில், அவர் பின்பற்றியது பெரியார் மற்றும் அண்ணாவின் பகுத்தறிவு கொள்கை.

Advertising
Advertising

இதையும் படிங்க: பிருத்விராஜின் வாழ்க்கையையே மாற்றிய ரேவதி!.. இவ்வளவு நடந்திருக்கா?!.. அவர் மட்டும் இல்லனா!..

அடுத்து நடிகர் விஜய் பார்ட் டூ என சொல்லப்படும் ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவே மாட்டார். இதுவரை அவர் நடித்து வெளியான எந்த படத்தின் இரண்டாம் பாகமும உருவானதே இல்லை. அதேபோல், வேறு நடிகர் நடித்த படத்தின் இரண்டாம் பாகத்திலும் அவர் நடித்தது இல்லை. மொத்தத்தில் விஜய்க்கு இரண்டாம் பாகத்தில் ஆர்வமே இல்லை என சொல்லப்படுகிறது.

அடுத்து நாம் பார்க்கப்போவது சிவகார்த்திகேயன். டிவி ஆங்கராக இருந்து சினிமாவில் நுழைந்து இப்போது 30 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கும் நடிகராக உயர்ந்திருக்கிறார். ரஜினி, விஜயை தொடர்ந்து குழந்தைகளுக்கு பிடித்த நடிகராகவும் சிவகார்த்திகேயன் மாறியிருக்கிறார். இவர் எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் லிப்-லாக் என சொல்லப்படும் உதட்டோடு உதடு முத்தம் வைக்கும் காட்சியில் நடிக்கவே கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.

இதையும் படிங்க: லியோ ப்ளாப் ஆகிடுமா?.. அடேய் உங்க லாஜிக்குல தீய வைக்க… கடுப்படிக்கும் விஜய் ரசிகர்கள்!

அடுத்து நாம் பார்க்கபோவது நடிகர் கார்த்தி. சூர்யாவின் தம்பியான இவர் பருத்திவீரன் படம் மூலம் நடிகராக மாறினார். முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த கார்த்தி இதுவரை பல ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். சம்பளத்தை இரண்டு மடங்காக கொடுத்தாலும் சரி சிகரெட் புகைக்கும் காட்சியில் நடிக்கவே கூடாது என்பது இவரின் கொள்கை.

அடுத்து நடிகர் மாதவன். இவர் எந்த திரைப்படத்திலும் அசைவம் சாப்பிடுவது போன்ற காட்சிகளில் நடிக்கவே மாட்டார். அப்படியே சாப்பிடுவது போல காட்சிகள் வந்தாலும் வசனம் மட்டுமே பேசி சமாளித்துவிடுவார். அல்லது அசைவ உணவுக்கு பதிலாக காளானை வைத்து கறி சாப்பிடுவது போல நடித்துவிடுவாராம்.

இதையும் படிங்க: வாய்க்கொழுப்பால் புடுங்கப்பட்ட பீஸ்!.. கெட்டதுலயும் ஒரு நல்லது நடத்துருக்காம்.. இவரும் பிக் பாஸுக்கு போறாரா?..

Published by
சிவா

Recent Posts