Connect with us

Cinema News

தமிழ் சினிமாவில் நடந்த சொதப்பலான டாப் 5 காட்சிகள்… அட இத பார்க்காம விட்டோமே!

கோலிவுட்டில் வெளிவந்த சில தமிழ் திரைப்படங்களில் இருக்கும் காட்சிகள் சில சரியாக எடிட் செய்யப்படாமல் ஷூட்டிங்கில் சொதப்பியதே இடம் பெற்று இருக்கிறது. அதுகுறித்த சுவாரஸ்ய தகவல்கள் உங்களுக்காக.

வசந்த மாளிகை:

கே. எஸ். பிரகாஷ் ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ, வி. எஸ். ராகவன் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தில் பழங்குடியினருடன் சிவாஜி மற்றும் வாணிஸ்ரீ இணைந்து மழையில் ஒரு பாடலுக்கு ஆடி இருப்பார்கள். அப்போது டான்சர்களில் ஒருவர் தொப்பென்று விழுந்து விடுவார். இருந்தும் அவர் தட்டு தடுமாறி எழுந்து ஆடிய காட்சிகளாஇ அப்படியே படத்தில் வைத்திருப்பர்.

அள்ளித் தந்த வானம்:

2001ல் வெளியான தமிழ்த் திரைப்படம் அள்ளித் தந்த வானம். இத்திரைப்படத்தில் பிரபுதேவா, லைலா, முரளி, விவேக், பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடித்திருந்தனர். ஸ்ரீதர் பிரசாத் இத்திரைப்படத்தை இயக்கினார். இப்படத்தின் காட்சியில் மழை எவெக்ட் போடப்பட்டு இருக்கும். எல்லாரும் ஓடிக்கொண்டிருக்க தண்ணி பைப் பிடித்திக்கொண்டிருந்த ஒருவர் அந்த காட்சியில் நிற்பது படத்தில் இடம்பெற்று இருக்கும். அதை எடிட் செய்யப்படாமலே படத்தில் இருக்கும்.

ஆணழகன்:

1995ம் ஆண்டு வெளியான காமெடி திரைப்படம் ஆணழகன். தியாகராஜன் இயக்கிய இப்படத்தில் பிரசாந்த், புதுமுகம் சுனேகா, வடிவேலு, சார்லி மற்றும் சின்னி ஜெயந்த் ஆகியோர் நடித்துள்ளனர். இது தெலுங்கு படமான சித்ரம் பலரே விசித்ரம் படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தின் ஒரு காட்சியில் வடிவேலு மனநல காப்பகத்தில் வண்டியில் ஏறுவார். அவர்களிடம் இருந்து தப்பிக்க கதவை திறந்து கொண்டு அவர் கீழே விழும்போது தவறுதலாக அங்கு வந்த சைக்கிளில் கூட அவர் தலை மாட்டிவிடும். இந்த காட்சியும் படத்தில் அப்படியே இடம் பெற்று இருக்கும்.

நாயகன்:

முக்தா சீனிவாசன் தயாரித்த படம் நாயகன். இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், சரண்யா, கார்த்திகா, ஜனகராஜ், விஜயன், எம்.வி. வாசுதேவ ராவ், டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி ஆகியோர் நடித்துள்ளனர். ஒரு காட்சியில் நிழல்கள் ரவி பெட்ரோல் பேங்கில் மோதி கார் விபத்தில் சிக்குவார். அப்போது கார் சுழல அடியில் ஒரு பலகை வைத்து சுற்று எடுத்திருப்பர். அந்த காருடன் பலகையும் அப்பட்டமாக தெரியும்படி இருக்கும்.

டான்:

டான் என்பது 2022ம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படம். சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்த திரைப்படம். இதில் சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, பிரியங்கா அருள் மோகன், சூரி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் ஒரு காட்சியில் ஜார்ஜ் மரியன் ரோலிங் சாரில் உட்கார்ந்து எஸ்.ஜே சூர்யாவுடன் பேசுவது போல ஒரு காட்சி இருக்கும். அவர் உயரத்திற்கு ரோலிங் சாரை சுழற்ற முடியாததால் அதற்கு பின்னால் ஒரு ஆளை வைத்திருப்பர். அவரின் கை அப்பட்டமாக படத்தில் தெரியும்.

google news
Continue Reading

More in Cinema News

To Top