சின்ன பட்ஜெட்டில் பெரிய லாபம்!.. தனுஷுக்கு கோடிகளை கொட்டி கொடுத்த 5 படங்கள்…

Published on: January 16, 2024
dhanush
---Advertisement---

Dhanush: துள்ளுவதோ இளமை படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கியவர் தனுஷ். அதன்பின் காதல் கொண்டேன், புதுப்பேட்டை என வித்தியாசமான படங்களில் நடித்தார். ஒருபக்கம், திருடா திருடி, சுள்ளான் போன்ற மசாலா படங்களிலும் நடித்தார். ஒருகட்டத்தில் ஹாலிவுட், பாலிவுட் என முன்னேறினார்.

ஒருபக்கம் மசாலா கமர்ஷியல் படங்களிலும் ஒருபக்கம் நடிப்புக்கு தீனி போடும் கதைகளிலும் நடித்து வரும் நடிகராக தனுஷ் மாறிவிட்டார். மாரி, பட்டாஸ் போன்ற படங்களில் நடிக்கும் தனுஷ்தான் ஆடுகளம், அசுரன், கர்ணன் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். சிறந்த நடிகருக்கான விருதுகளையும் தனுஷ் பெற்றிருக்கிறார்.

இதையும் படிங்க: கோட் படத்தில் பிரசாந்த் மற்றும் பிரபுதேவா கேரக்டர் இதுதான்!… அவங்களுக்கும் இந்த காட்சி இருக்கு?

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படம் பொங்கலுக்கு வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. ஹாலிவுட் பட ரேஞ்சில் இப்படத்தின் சண்டை காட்சிகள் அமைந்துள்ளதாக பலரும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.

Dhanush 23
Dhanush 23

தனுஷ் நடிப்பதோடு மட்டுமில்லாமல் ‘வுண்டர்பார் பிலிம்ஸ்’ என்கிற பெயரில் படநிறுனத்தை துவங்கி பல திரைப்படங்களை தயாரித்திருக்கிறார். 3, எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி, காக்கி சட்டை, காக்கா முட்டை, மாரி, நானும் ரவுடிதான், விசாரணை, பவர் பாண்டி, காலா, வட சென்னை, மாரி 2 ஆகிய படங்களை தயாரித்திருக்கிறார்.

இதையும் படிங்க: பிரசாந்துக்கு மரியாதை கொடுத்து அஜித்தை அசிங்கப்படுத்திய வைரல் புகைப்படம்!.. உண்மையில் நடந்தது என்ன?

ஆனால், 5 வருடங்களாக அவர் எந்த படங்களையும் தயாரிக்கவில்லை. ஏனெனில் காலா படத்தில் பெரிய நஷ்டத்தை சந்தித்தார். அதற்காக 3 படங்கள் சம்பளம் இல்லாமல் அவர் நடித்து கொடுக்க வேண்டியிருந்தது. அதேநேரம், தனுஷ் தயாரிப்பில் அவருக்கு அதிக லாபத்தை கொடுத்த 5 படங்கள் பற்றித்தான் பார்க்க போகிறோம்.

இதில் 5வது இடத்தில் இருப்பது விசாரணை. ஒரு கோடியில் உருவான இந்த திரைப்படம் 11 கோடியை வசூல் செய்தது. 4வதாக ஒரு கோடியில் உருவான காக்கா முட்டை திரைப்படம் 12 கோடியை வசூல் செய்தது. 3வதாக நானும் ரவுடிதான் படம் 14 கோடியில் உருவாகி 31 கோடியை வசூல் செய்தது. 2வதாக சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான எதிர்நீச்சல் திரைப்படம் 5 கோடியில் உருவாகி 22 கோடி வசூலை பெற்றது. இந்த வரிசையில் முதலிடத்தில் இருப்பது வேலை இல்லா பட்டதாரி படம்தான். 25 கோடியில் உருவான இப்படம் ரூ.90 கோடி வரை வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: ரசிகர்கள் மீது வெறுப்பை கொட்டும் அஜித்!… ஒரு காலத்தில் எப்படி இருந்தார் தெரியுமா? பிரபலம் சொல்லும் சம்பவம்!…

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.