பணம் வாங்கிட்டு நடிக்காத தனுஷ்!.. யார் அந்த மேலிடம்?.. தயாரிப்பாளர் பரபரப்பு புகார்!…

by சிவா |   ( Updated:2025-03-31 08:03:55  )
பணம் வாங்கிட்டு நடிக்காத தனுஷ்!.. யார் அந்த மேலிடம்?.. தயாரிப்பாளர் பரபரப்பு புகார்!…
X

#image_title

Dhanush: சினிமாவில் ஒரு நடிகரை வைத்து படமெடுக்க வேண்டும் என ஆசைப்படும் ஒரு தயாரிப்பு நிறுவனம் அந்த நடிகரிடம் பேசி அட்வான்ஸ் தொகையாக சில கோடிகளை கொடுப்பார்கள். அந்த நடிகரும் அதை வாங்கிக் கொண்டு அவருக்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது அந்த தயாரிப்பாளருக்கு கால்ஷீட் கொடுப்பார். அதாவது, அந்த தயாரிப்பாளர் தயாரிக்கும் பாடத்தில் நடித்து கொடுப்பார்.

அதிக பட வாய்ப்புகள் இல்லாத நடிகர்கள் உடனே அந்த தயாரிப்பாளரின் படத்தில் நடித்து கொடுப்பார். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நடிகராக இருந்தால் சில படங்களை நடித்து முடித்துவிட்டு அந்த தயாரிப்பாளரின் படத்தில் நடிப்பார். சில நடிகர்கள் அட்வான்ஸ் வாங்கி பல வருடங்கள் ஆகியும் நடித்து கொடுக்க மாட்டார்கள். அந்த நடிகரை தயாரிப்பாளரும் தொடர்ந்து கேட்டு கொண்டே இருப்பார்.

‘இந்த படம் முடிஞ்சவுடனே உங்களுக்குதான் சார் கால்ஷீட்’ என தொடர்ந்து சொல்லிகொண்டே இருப்பார். ஒருகட்டத்தில் பொறுமையை இழக்கும் அந்த தயாரிப்பாளர் நியாயம் கேட்டு தயாரிப்பாளர் சங்கத்தை நாடுவார். அதன்பின் அந்த நடிகரை கூப்பிட்டு பேசி கால்ஷீட் வாங்கி கொடுப்பார்கள்.

idli kadai
#image_title

சிம்பு, விஷால், தனுஷ் என பலரும் இப்படி தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் வாங்கிவிட்டு நடித்து கொடுக்காமல் இருக்கும் நடிகர்களின் பட்டியலில் இருக்கிறார்கள். தனுஷை வைத்து பொல்லாதவன், ஆடுகளம் போன்ற படங்களை தயாரித்த ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனம் 6 வருடங்களுக்கு முன்பே தனுஷுக்கு அட்வான்ஸ் கொடுத்திருக்கிறது. ஆனால், இப்போதுவரை தனுஷ் கால்ஷீட் கொடுக்கவில்லை. இந்நிலையில்தான் அந்த நிறுவனம் ஃபெப்சி தலைவர் செல்வமணிக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

06.06.2024 அன்று தயாரிப்பாளர் சங்கத்தில் தனுஷ் எங்களுக்கு பணம் நடித்து கொடுக்க வேண்டும் என பேசிக்கொண்டிருக்குபோதே நீங்கள் குறுக்கிட்டு ‘தனுஷ் இட்லி கடை படத்தில் நடிக்க வேண்டும் என மேலிட உத்தரவு’ என சொன்னீர்கள். அக்டோபர் மாதத்திற்குள் எங்களுக்கு நியாயம் வாங்கி தருவதாக சொல்லி இருந்தீர்கள். ஆனால், இப்போது நாங்கள் பிரச்சனை செய்வதாக சொல்கிறீர்கள். தயாரிப்பாளர் சங்கம் எனக்கு நியாயம் வாங்கி தர வேண்டும்’ என அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதுபற்றி ஆர்.கே.செல்வமணி விரைவில் விளக்கமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருபக்கம். உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் நிறுவனமே அந்த மேலிடம் என பலரும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். இட்லி கடை படத்தை டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் என்பவரே தயாரித்து வருகிறார். ஃபர்ஸ்ட் காபி அடிப்படையில் இந்த படத்தை இயக்கி கொடுக்கிறார் தனுஷ். டான் பிக்சர்ஸோடு இணைந்து ரெட் ஜெயண்ட் நிறுவனமும் இட்லி கடை படத்தை தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.

#image_title

திமுக ஆட்சி வந்துவிட்டாலே உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தமிழ் திரையுலகை பல வகைகளிலும் கட்டுப்படுத்தும். தேவைப்பட்டால் மிரட்டவும் செய்வார்கள். ஆளும் கட்சி என்பதாலும், உதயநிதி துணை முதல்வர் மற்றும் அவரின் அப்பா மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் என்பதாலும் அவர்களுக்கு எதிராக யாரும் செயல்பட மாட்டார்கள் என சினிமா பத்திரிக்கையாளர்கள் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள்.

Next Story