பல வருஷமா போராடியும் ஹிட் இல்லாம தவிக்கும் 5 இளம் ஹீரோக்கள்!.. ஐயோ பாவம் ஜிவி பிரகாஷ்...
சினிமாவில் ஒரு நடிகர் ஒரு படத்திலேயே ரசிகர்களிடம் பிரபலமாகி தொடர்ந்து படங்களில் நடித்து ஹிட் படங்களை கொடுத்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொள்வார். சிவகார்த்திகேயன், கார்த்தி, விஜய் சேதுபதி ஆகியோரை இதற்கு உதாரணமாக சொல்லலாம். சில நடிகர்கள் ஒரு ஹிட் கொடுப்பார்கள். அதன்பின் பல வருடங்களாக போராடுவார்கள். ஆனால், படம் ஓடாது. அப்படி போராடும் 5 இளம் நடிகர்கள் பற்றிதான் இங்கு பார்க்கபோகிறோம்.
இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறியவர் ஜி.வி.பிரகாஷ் டார்லிங், திரிஷா இல்லனா நயன்தாரா ஆகிய ஹிட் படங்களை கொடுத்தார். அதோடு சரி. அதன்பின் பல படங்களிலும் நடித்துவிட்டார். வாரத்திற்கு ஒரு படம் ரிலீஸ் ஆகும் அளவுக்கு அவரின் கையில் படங்கள் இருக்கிறது. நல்ல கதைகளையும் தேர்ந்தெடுத்தே நடிக்கிறார். ஆனாலும் வொர்க் அவுட் ஆகவில்லை.
இதையும் படிங்க: அந்த படத்தில் நடக்காத ரஜினியின் ஆசை.. முத்து படத்தால் நிறைவேறிய அதிசயம்!..
பரியேறும் பெருமாள் படம் மூலம் கவனம் ஈர்த்தவர் கதிர். அதன்பின் நல்ல கதைகளில் நடித்து டேக் ஆப் ஆவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் நடித்து வெளியான படங்கள் பாக்ஸ் ஆபிசில் ஹிட் அடிக்கவில்லை. பிகில் படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடித்தார். சிகை, சத்ரு, ஜடா, சர்பத், யுகி, தலைக்கோதல் என படங்கள் வந்தது. ஆனால், ரசிகர்களை கவரவில்லை.
பியார் பிரேமா காதல் எனும் ஹிட் படத்தை கொடுத்தவர் ஹரிஸ் கல்யாண். அதன்பின் அவர் நடிப்பில் வெளியான தர்ம பிரபு படம் மட்டுமே ரசிகர்களை கவர்ந்தது. எல்.ஜி.எம், ஓ மணப்பெண்ணே என சில படங்களில் நடித்தார். கடைசியாக வெளியான பார்க்கிங் படம் கூட நல்ல விமர்சனத்தை பெற்றது. ஆனாலும், ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுக்க முடியாமல் தவித்து வருகிறார்.
இதையும் படிங்க: நானே டிஸ்கோ மூடுல இருக்கேன்.. இதுல நீங்க வேற! ‘வேட்டையன்’ படத்தால் கடுப்பில் ரஜினி
ஜிவி பிரகாஷை போலவே இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறிவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. இவர் நடிப்பில் வெளியான மீசைய முறுக்கு படம் மட்டுமே ஓடியது. அதன்பின் நான் சிரித்தால், அன்பறிவு என சில படங்களில் நடித்தார். கடைசியாக வெளியான வீரன் படுதோல்வி. இப்போது ஆதி எந்த படத்திலும் நடிக்கவில்லை.
நடிகர் முரளியின் மகன் என வாரிசு நடிகராக சினிமாவில் நுழைந்தவர்தான் அதர்வா. அழகாக இருந்தும், நடனம், நடிப்பு, சண்டை காட்சிகள் என அனைத்திலும் திறமை இருந்தும் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முடியாமல் இருக்கிறார். இவர் எப்போது ஹிட் படத்தை கொடுத்தார் என அவருக்கே தெரியாது. இவரும் ஒரு வெற்றி படத்திற்காகவே போராடி வருகிறார்.