இந்த ஆளு நன்றி கெட்டவன்.. எல்லாத்தையும் மறந்துட்டான்!. கவுண்டமணியை திட்டிய பாக்கியராஜ்!..

Published on: March 18, 2025
---Advertisement---

Goundamani: கோவையை சேர்ந்தவர் கவுண்டமணி. சினிமாவுக்கு வருவதற்கு முன் நாடகங்களில் நடித்து வந்தார். 60களிலேயே சில படங்களில் ஒரு காட்சியில் வரும் நடிகராக நடித்திருக்கிறார். 70களின் இறுதியில் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 80களில் நிறைய படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். தனியாக என்றாலும் சரி.. செந்திலுடன் இணைந்தும் சரி.. பல படங்களிலும் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார்.

80,90களில் நம்பர் ஒன் காமெடி நடிகராக வலம் வந்தார். ராமராஜன், பிரபு, கார்த்திக், சத்தியராஜ் உள்ளிட்ட பலரின் படங்களையும் கவுண்டமணி காமெடியே ஓட வைத்தது. ஒரு நாளைக்கு 10 லட்சம் என சம்பளம் வாங்கிய முதல் காமெடி நடிகர் கவுண்டமணிதான். படத்தின் வெற்றிக்கு கவுண்டமணி காமெடி தேவை என்கிற நிலை அப்போது இருந்தது.

கவுண்டமணி செந்தில்: ஹாலிவுட்டில் லாரன் ஹார்டி போல கோலிவுட்டில் கவுண்டமணி – செந்தில் கூட்டணி ரசிகர்களை பல வருடங்கள் சிரிக்க வைத்தார்கள். இப்போது கோலிவுட்டில் காமெடி வறட்சிதான் நிலவுகிறது. கவுண்டமணி திறமையான நடிகர் என்றாலும் சினிமாவில் வாய்ப்பு உடனே கிடைத்துவிடவில்லை. கவுண்டமணிக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்தவர் இயக்குனர் பாக்கியராஜ்.

முதல் பட வாய்ப்பு: இருவரும் ஒரே ஊர்க்காரர்கள். ஒரே அறையில் தங்கி சினிமா வாய்ப்பு தேடியவர்கள். பாக்கியராஜின் குரு பாரதிராஜா பதினாறு வயதினிலே படம் எடுத்தபோது பாரதிராஜாவை வற்புறுத்தி அந்த படத்தில் நடிக்க கவுண்டமனிக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்தார் பாக்கியராஜ். அந்த படத்தில் ‘பத்த வச்சிட்டியே பரட்ட’ என வசனம் பேசினார் கவுண்டமணி.

பதினாறு வயதினிலே: அடுத்து பாரதிராஜா கிழக்கே போகும் ரயில் படம் இயக்கிபோது ராதிகாவின் மாமா வேடத்தில் டெல்லி கணேஷை நடிக்கவைக்க திட்டமிட்டார். ஆனால், அப்போதும் கவுண்டமணி பெயரை சொல்லி அவரே நடிக்கட்டும் என சொல்லி வாய்ப்பு வாங்கி கொடுத்து பாக்கியராஜ்தான். ஆனால், பின்னாளில் ‘என்னை இயக்கிய இயக்குனர்கள்’ என்கிற தலைப்புல் ஒரு கட்டுரை எழுதினார் கவுண்டமணி. ஆனால், அதில் பாக்கியராஜின் பெயரை அவர் குறிப்பிடவில்லை.

ஒருமுறை டெல்லி கணேஷை பாக்கியராஜ் பார்த்தபோது ‘அந்த படத்தில் உங்களைத்தான் நடிக்க வைக்க வேண்டும் என பாரதிராஜா சொன்னார். ஆனால், நான் கவுண்டமணிக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்தேன். ஆனால், அவருக்கு நன்றியே இல்லை. என்னை இயக்கிய இயக்குனர்கள் கட்டுரையில் அவர் என் பெயரை குறிப்பிடவே இல்லை’ என சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார். இந்த தகவலை டெல்லி கணேஷே ஊடகம் ஒன்றில் கூறியிருக்கிறார்.

பதினாறு வயதினிலே படம் முடிந்தபின் டைட்டில் கார்ட்டில் கவுண்டமணிக்கு என்ன பெயர் போடுவது என தெரியவில்லை. அவரின் இயற்பெயர் சுப்பிரமணி. அவரின் பெயர் என்ன என பாக்கியராஜ் கேட்க அங்கிருந்தவர்கள் ‘கவுண்ட்டர் மணி’ என சொன்னார்கள். நாடகங்களில் யார் என்ன வசனம் பேசினாலும் அதற்கு ஒரு கவுண்ட்டர் கொடுப்பார் சுப்பிரமணி. அதனால் அவருக்கு அந்த பெயர். கவுண்ட்டர் மணி என சொன்னது பாக்கியராஜின் காதில் கவுண்டமணி என விழுந்தது. அப்படியே படத்தின் டைட்டில் கார்டில் போட அதுவே அவரின் பெயராக நிலைத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment