நடிக்க வந்த முதல் நாளே துரத்திவிட்ட இயக்குனர்!.. நயன்தாராவுக்கு நடந்த அசிங்கம்!..

Published on: March 18, 2025
---Advertisement---

Nayanthara: கேரளாவை சேர்ந்த நயன்தாராவின் உண்மையான பெயர் டயானா மரியம் குரியன். அங்கு டிவியில் வேலை பார்த்துகொண்டிருந்தார். சில விளம்பர் படங்களிலும் நடித்தார். தமிழில் ஐயா திரைப்படம் மூலம் நடிக்க துவங்கினார். ரஜினியுடன் சந்திரமுகி, சிம்புவுடன் வல்லவன் என சில படங்களில் நடித்தார். ஆனால், அவரால் முன்னணி நடிகையாக மாற முடியவில்லை.

ஏனெனில், அப்போது அசின், திரிஷா போன்ற நடிகைகள் பெரிய ஹீரோக்களுடன் நடித்துக்கொண்டிருந்தார்கள். எனவே, நயன்தாராவுக்கு செகண்ட் ஹீரோயின் கதாபாத்திரம் மட்டுமே கிடைத்தது. அசின் கதாநாயகியாக நடித்த கஜினி படத்தில் நயன்தாராவுக்கு செகண்ட் ஹீரோயின் வேடம்தான் கிடைத்தது.

எனவே, குண்டாக இருந்த உடலை குறைத்து அழகாக மாறி பில்லா போன்ற படங்களில் பிகினி அணிந்து ரசிகர்களை கிறங்க வைத்தார். அதன்பின் தொடர்ந்து கதாநாயகியாக நடிக்க துவங்கினார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்தார். ராஜா ராணி திரைப்படம் இவரை முன்னணி நடிகையாக மாற்றியது. அதுவும், நடிப்புக்கு முழுக்கு போடுகிறேன் என அறிவித்துவிட்டு சிறிது இடைவெளிவிட்டு மீண்டும் நடித்த படம் அது.

அந்த படத்திற்குபின் நம்பர் ஒன் நடிகையாகவும், அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் மாறினார். ஒருகட்டத்தில் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க துவங்கினார். அப்படி அவர் நடித்த அறம்,மாயா, நெற்றிக்கண், நானும் ரவுடிதான் போன்ற படங்கள் ஹிட் அடித்தது.

இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதோடு, வாடகைத் தாய் மூலம் 2 குழந்தைகளுக்கும் அம்மா ஆகிவிட்டார். இப்போது நயன் படப்பிடிப்புக்கு வரும்போது 10 பேர் அவருடன் வருவார்கள். அவர்களுக்கும் சேர்த்து தயாரிப்பாளர் காசு கொடுக்கவேண்டும். அதோடு, புரமோஷனுக்கு வரமாட்டேன், சென்னையில் மட்டுமே ஷூட்டிங் என ஏகப்பட்ட கண்டிஷன்களை போட்டுவிட்டுதான் நடிக்க ஒப்புகொள்கிறார்.

இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய சரத்குமார் ’ஐயா படத்தில் நயன்தாரா நடிக்க வந்த முதல் நாள் மாடர்ன் டிரெஸ்ல வந்து இறங்குனாங்க. அதை பார்த்து கோபப்பட்ட இயக்குனர் ஹரி ‘இந்த பொண்ண கூட்டிட்டு போங்கய்யா’ என சொல்லி துரத்திட்டார். இந்த படத்துக்கு இவங்க செட் ஆக மாட்டாங்க.. வெயிட் பண்ண சொல்லுங்க. சாயங்காலம் வேற காஸ்டியூம் கொடுத்து பார்க்கலாம்’ என சொன்னார். அதன்பின் பாவாடை தாவணியில் நயன்தாராவை பார்த்துவிட்டு ‘சரி இவரே நடிக்கட்டும்’ என சொல்லிவிட்டார்’ என சொல்லியிருக்கிறார்.

ஐயா படத்தில் நடிக்க வரும்போது அம்மாவுடன் ஆம்னி பஸ்ஸில் சென்னை வந்த நயன்தாரா இப்போது தனி விமானத்தில் கணவர் விக்னேஷ் சிவனுடன் ஜாலியாக பறந்து செல்வது குறிப்பிடத்தக்கது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment