பத்திரிகையாளர்களை நட்டாற்றில் விட்ட தயாரிப்பாளர்... ஜெய்சங்கர் செய்த அந்த உதவி

தமிழ்சினிமா உலகில் மக்கள் கலைஞர் என்று போற்றப்படுபவர் ஜெய்சங்கர். அந்த வகையில் அவருக்கு அந்தப் பெயர் கிடைப்பதற்கு காரணம் பல உண்டு. அவற்றில் ஒரு முக்கியமான காரணத்தை இந்த நிகழ்வின் மூலம் பிரபலம் ஒருவர் பகிர்ந்துள்ளார். என்னன்னு பார்க்கலாமா...
ஜெய்சங்கரை இன்று வரை மக்கள் கலைஞர்னு ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள் என்றால் அதுக்கு பல காரணங்கள் இருக்கு. கடமை நெஞ்சம் என்ற படப்பிடிப்பு மைசூரில் நடந்தது. படப்பிடிப்பு முடிவடைந்ததும் ஜெய்சங்கர் காரிலேயே சென்னைக்குப் புறப்பட்டு விட்டார். பத்திரிகையாளர்களுக்கு பெங்களூருவில் இருந்து டிரெயினில் டிக்கெட் போடப்பட்டு இருப்பதாகவும் அங்குள்ள ரெயில்வே ஸ்டேஷனுக்கு வந்து தயாரிப்பாளரே அவருக்குக் கொடுப்பார் என்றும் சொல்லப்பட்டது.
ஆனால் மறுநாள் தயாரிப்பாளர் வரவே இல்லை. இந்தப் பத்திரிகையாளர்களுக்கு எல்லாம் என்ன செய்றதுன்னே தெரியலை. கையில இருக்குற பணத்தை வச்சி சென்னைக்குப் பஸ்ல போயிடலாம்னு முடிவு எடுத்தாங்க.
அந்த நேரத்துல தான் மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்களைத் தொடர்பு கொண்டு பேசினார். நீங்க திரும்புறதுக்கு டிக்கெட் போடலைங்கற விவரம் இப்போ தான் தெரிந்தது. நான் நண்பர் ஒருவர்கிட்ட பேசிருக்கேன். நீங்க அவர் சொல்ற ஓட்டல்ல தங்கிக்கோங்க. காலையில டிக்கெட் போட்டுத் தர்ரேன். அதுக்கான எல்லா ஏற்பாடுகளையும் நான் செய்றேன்னு சொன்னார். மறுநாள் அவர்கள் சென்னை செல்ல ரெயில்வே ஸ்டேஷன்ல காத்துக்கிட்டு இருந்தாங்க.
கடமை நெஞ்சம்
அவர்கள் பயணிக்கும்போது தேவையான உணவுப்பொட்டலங்களை ஒருவர் தயாராக வைத்துக் கொண்டு இருந்தார். அப்போது ஜெய்சங்கர் செய்த உதவியை எந்தக் காலத்திலும் என்னால் மறக்க முடியாது என்று அப்போது சினிமா எக்ஸ்பிரஸ் பத்திரிகையிலே ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டு இருந்த ராமமூர்த்தி கட்டுரை ஒன்றில் தெரிவித்துள்ளார். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
நடிகர் ஜெய்சங்கர் படத்தில் மட்டும் அல்ல நிஜ வாழ்க்கையில் பல்வேறு உதவிகளைச் செய்துள்ளார். அவரது படங்களில் அவருடைய எதார்த்தமான நடிப்பு மக்களை ரொம்பவே கவர்ந்தது. அவர் துப்பறியும் படங்களில் நடித்ததால் தென்னகத்தின் ஜேம்ஸ்பாண்டு என்றும் அழைக்கப்பட்டார். அந்த வகையில் அவரது பெரும்பாலான படங்கள் சூப்பர்ஹிட் அடித்தன. இன்றும் அவரது படங்களைப் பார்ப்பது என்றால் ப்ரஷ்ஷாகவே இருக்கும்.