Categories: latest news

இந்திய சினிமாவில் எந்த நடிகரும் செய்யாத சாதனை!.. அப்பவே அசால்ட் பண்ணிய மம்முட்டி!…

Mammooty: மலையாள நடிகர்களில் முக்கியமானவராக இருப்பவர் மம்முட்டி. 1971ம் வருடம் இவர் சினிமாவில் அறிமுகமானார். 55 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார். இந்திய சினிமாவில் சிறந்த நடிகராக பார்க்கப்படுபவர் இவர். பல தேசிய விருதுகளையும் வாங்கியிருக்கிறார். மிகச்சிறந்த கதையம்சம் கொண்ட படங்களில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

1980களில் இவர் நடித்த சிபிஐ, ஐயர் தி கிரேட் உள்ளிட்ட பல படங்கள் தமிழிலும் டப் செய்யப்பட்டு தமிழகத்திலும் நல்ல வசூலை பெற்றது. அதைத்தொடர்ந்து நேரடி தமிழ் படங்களிலும் மம்முட்டி நடிக்க துவங்கினார். மௌனம் சம்மதம் என்கிற இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படம் தமிழில் உருவாகி வசூலை அள்ளியது.

அதேபோல், பாலச்சந்தரின் இயக்கத்தில் அழகன் என்கிற படத்தில் நடித்தார். இந்த படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி நடித்த தளபதி படத்தில் மம்முட்டி அசத்தியிருந்தார். இந்த படத்தில் ரஜினி – மம்முட்டி இடையே நடக்கும் காட்சிகள் நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல எடுக்கப்பட்டிருந்தது.

அதேபோல், மறுமலர்ச்சி, மக்களாட்சி, அரசியல், ஆனந்தம் என பல நேரடி தமிழ் படங்களில் நடித்து ஹிட் கொடுத்திருக்கிறார். மலையாளத்தில் அதிகமான இன்வெஸ்டிகேஷன் படங்களில் மம்முட்டி நடித்திருக்கிறார். சிபிஐ படம் மட்டும் இதுவரை 5 பாகங்கள் வெளிவந்திருக்கிறது. எல்லாமே ஹிட் அடித்திருக்கிறது.

இந்நிலையில், இந்திய சினிமாவில் எந்த நடிகரும் செய்யாத ஒரு சாதனையை மம்முட்டி 1980களிலேயே செய்து காட்டியிருக்கிறார். 1983ம் வருடம் 36 படங்கள், 1984ம் வருடம் 34 படங்கள், 1985 மற்றும் 86 ஆகிய இரண்டு ஆண்டுகளில் 35 படங்கள் என நடித்து அந்த 4 ஆண்டுகளில் மொத்தம் 139 படங்களில் நடித்திருக்கிறார். இதுவரை 4 வருடங்களில் இவ்வளவு படங்களில் எந்த நடிகரும் நடித்தது இல்லை.

இவ்வளவு சாதனைகளை செய்தும் மம்முட்டி தன்னை எங்கேயும் தற்பெருமை பேசியது இல்லை. ஊடகங்களில் பேசினாலும் மிகவும் வெளிப்படையாக மனதில் பட்டதை பேசும் பழக்கம் கொண்டவர் இவர். இதுவரை 420 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். 73 வயது ஆகியும் மிகவும் இளைமையான தோற்றத்தில் இப்போதும் ஆக்டிவாக தொடர்ந்து நடித்து வருகிறார். கவுதம் மேனன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள Dominic and the ladie’s purse படம் விரைவில் வெளியாகவுள்ளது.

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com

Recent Posts

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

1 hour ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

14 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

15 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

15 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

16 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

22 hours ago