பயில்வான் ரங்கநாதனுக்கு பளார் விட்டு எம்.ஜி.ஆர்!.. பின்னணியில் அந்த நடிகர்!..

by சிவா |
பயில்வான் ரங்கநாதனுக்கு பளார் விட்டு எம்.ஜி.ஆர்!.. பின்னணியில் அந்த நடிகர்!..
X

MGR: பல திரைப்படங்களில் கமெடி காட்சிகளில் நடித்து ரசிகர்களிடம் பயில்வான் ரங்கநாதன். 70களில் நடிக்க துவங்கிய இவர் 80, 90களில் பல படங்களிலும் காமெடி காட்சிகளில் நடித்திருக்கிறார். குறிப்பாக கவுண்டமணி பீக்கில் இருந்த போது அவருடன் பல படங்களிலும் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார்.

குறிப்பாக 'ஆவாரம் பூ' படத்தில் ஷர்மிளியின் கணவராக வருவார். அந்த படத்தில் ஷர்மிளிக்கும், கவுண்டமணிக்கும் இடையே கள்ளக்காதல் இருக்கும். ஷர்மிளியின் வீட்டில் ரொமான்ஸ் செய்ய கவுண்டமணி வந்த நேரத்தில் பயில்வான் ரங்கநாதன் வந்துவிடுவார். எனவே, வீட்டில் இருக்கும் மேலே மறைந்து கொள்வார் கவுண்டமணி. கவுண்டமணிக்கு முன்பே வேறொருவரும் வந்து கீழே ஒளிந்து கொண்டிருப்பார்.

அப்போது பயில்வானிடம் ஷர்மிளி தனக்கு அது வேண்டும் இது வேண்டும் என கேட்க, ‘எல்லாம் மேலே இருக்கவன் பார்த்துக்குவான்’ என பயில்வான் ரங்கநாதன் சொல்லில்கொண்டே இருப்பார். ஒரு கட்டத்தில் ‘எல்லாம் மேல இருக்கவன் பாத்துக்குவான்னா கீழ ஒருத்தன் இருக்கான்’ என கவுண்டமணி சொல்ல தியேட்டரே சிரிக்கும்.

பயில்வான் ரங்கநாதன் ஒரு காமெடி நடிகர் மட்டுமில்லை. அவர் ஒரு பத்திரிக்கையாளரும் கூட. சினிமாவுக்கு வருவதற்கு முன்பே பத்திரிக்கையில் வேலை செய்தவர். சினிமாவுக்கு வந்த பின்னரும் அவர் பத்திரிக்கையில் வேலை செய்வதை நிறுத்தவில்லை. இப்போதும் பல யுடியூப் சேனல்கள் சர்ச்சையான விஷயங்களை பேசுவார்.

குறிப்பாக நடிகர், நடிகைகளின் அந்தரங்க விஷங்களை பற்றி புட்டு புட்டு வைப்பார். இதனால், பல எதிர்ப்புகளையும் இவர் சந்திப்பதுண்டு. சினிமா விழாக்களில் நடிகர், இயக்குனர்களிடம் துணிச்சலாக சர்ச்சையான கேள்விகளை கேட்டு பரபரப்பை ஏற்படுத்துவார்.

இவர் தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர். எம்.ஜி.ஆர், நடிகராக இருக்கும்போதிலிருந்தே செய்தியாளராக வேலை செய்து வருபவர். இவர் அண்ணா என்கிற பத்திரிக்கையில் வேலை செய்து கொண்டிருந்தபோது ஒரு விழாவில் ‘எம்.ஜி.ஆரெல்லாம் ஒரு தலைவரா?’ என நடிகர் தேங்காய் சீனிவாசன் பேசியிருக்கிறார்.

அங்கே சென்றிருந்த பயில்வான் ரங்கநாதன் ‘நீ எப்படி எம்.ஜி.ஆர் பற்றி இப்படி பேசலாம்?’ என அவரிடம் சண்டை போட்டதோடு, அவரின் சட்டையை பிடித்து இழுத்து அடிக்க போய்விட்டார். அதன்பிறகு தேங்காய் சீனிவாசன் எம்.ஜி.ஆரை தொடர்பு கொண்டு ‘தலைவரே நான் உங்களை பற்றி ஒன்றும் சொல்லவில்லை. ஆனால், ரங்கநாதன் என்னை எல்லோர் முன்னிலையும் அடிக்க வந்து அவமானப்படுத்தி விட்டான்’ என சொல்ல கோபமடைந்த எம்.ஜி.ஆர் பயில்வானை தனது ராமாபுரம் தோட்டத்திற்கு வரச்சொன்னார்.

அங்கு பயில்வான் சென்றதும் கோபத்தில் இருந்த எம்.ஜி.ஆர் அவரின் கன்னத்தில் பளாரென ஒரு அறைவிட்டாராம். அதில் பயில்வான் மயங்கி விழுந்துவிட்டாராம். அதன்பின் அவர் முகத்தில் தண்ணியெல்லாம் தெளித்து அமர வைத்திருக்கிறார்கள். ‘நீ எதுக்கு சீனிவாசனை அடிக்க போன?’ என எம்.ஜி.ஆர் கேட்க பயில்வான் நடந்ததை சொல்லியிருக்கிறார்.

சரி விடு.. நீ சாப்பிட்டு போ என சொல்லி அவரை சாப்பிட வைத்ததோடு, கையில் ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொடுத்து அனுப்பி வைத்தாராம் எம்.ஜி.ஆர்.

Next Story