தேவர் மகன் படத்தின் ஒவ்வொரு ஷாட்டையும் முடிவு பண்ணினது இவர்தான்.. அட தப்பா நினைச்சுட்டோமே

ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை: 1992 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான திரைப்படம் தேவர் மகன். பரதன் இயக்கத்தில் கமலுடன் இணைந்து சிவாஜி, நாசர், ரேவதி என முக்கிய நடிகர்களும் நடித்திருந்தனர். தீபாவளி ரிலீஸாக வெளியான தேவர் மகன் திரைப்படம் 40வது இந்திய தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் பல பிரிவுகளில் 5 விருதுகளை வென்றது. அதுமட்டுமில்லாமல் ஆஸ்கார் விருதுக்கும் இந்தப் படம் பரிந்துரைக்கப்பட்டது.
மைல் கல்: இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை என கமல்தான் எழுதினார். ஒவ்வொரு கதாபாத்திரத்தின் வசனத்தையும் அவரேதான் பார்த்து பார்த்து எழுதியிருக்கிறார். மொத்த திரைக்கதையையும் ஏழு நாள்களில் எழுதி முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தேவர் மகன் திரைப்படம் நாசர் கெரியரில் ஒரு மைல் கல்லாக அமைந்த திரைப்படம். அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவிலேயே ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம்.
நாசருக்கு பழக்கமில்லாத ஏரியா: இன்று வரை அந்தப் படம் அனைவராலும் பேசப்பட்டு வருகிறது. மதுரையில் உள்ள தேவர்களை சார்ந்த படமாகத்தான் இது அமைந்தது. ஆனால் அதை பற்றி எதுவும் தெரியாத அந்த மாவட்டத்தின் வட்டார வழக்குகளே தெரியாத ஒரு இயக்குனரால் எடுக்கப்பட்ட படம். நாசருக்கும் இந்த வட்டார வழக்கு புதுசுதான். ஏனெனில் நாசருக்கு சொந்த ஊர் செங்கல்பட்டு. அதனால் மதுரை மண்ணின் கலாச்சாரமே தெரியாது.
இயக்குனர் பரதனை பொறுத்தவரைக்கும் படத்தில் ஒரு ஆளாக இருந்தாலே தவிர கமல்தான் முழுக்க முழுக்க படத்தை ஒரு கோட்டில் கொண்டு சென்றார் என்ற ஒரு பேச்சு இது நாள் வரைக்கும் இருந்திருக்கிறது. இதை பற்றி நாசர் கூறும் போது இது முழுக்க முழுக்க ஒரு வட்டாரத்தை சார்ந்த ஒரு கதைனு எல்லாருக்கும் தெரியும். இதுக்கு முற்றிலும் சம்பந்தப்படாத ஒரு இயக்குனர் இயக்கியிருக்கிறார் எனும் போது எல்லாருக்கும் இந்த சந்தேகம் வரத்தான் செய்யும்.
ஆனால் பரதன் அப்படி கிடையாது. ஒரு சீனியர் இயக்குனர். மலையாளத்தில் எத்தனையோ பல நல்ல படங்களை இயக்கியிருக்கிறார். தேவர் மகன் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் தெரியும் ஒவ்வொரு ஷாட்டையும் பரதன் தான் டிசைன் பண்ணினார். பிசி ஸ்ரீராம் கேமிராவை ஒரு இடத்தில் வைத்தால் கூட பரதன் அவர் சொல்கிற இடத்தில்தான் வைக்க சொல்வார். கமல் திரைக்கதை மட்டும்தான் எழுதினார். ஆனால் பரதன் தான் படமுழுக்க டிசைன் பண்ணினார் என நாசர் கூறினார்.
நாசரிடம் கமலின் வேண்டுகோள்: ஆனால் படத்தில் நாசரின் கேரக்டர் நியாயமானது. அதை வில்லத்தனமாக காட்டிடக் கூடாது. அந்தளவுக்கு உங்கள் கேரக்டரை கொண்டு போக வேண்டும் என நாசரிடம் கமல் கேட்டுக் கொண்டாராம். அதன் படி நாசரும் வில்லத்தனமாக இல்லாமல் நியாயமான கோபத்தில் ஒரு மனிதன் எப்படி பேசுவானோ அப்படி இந்தப் படத்தில் நடித்தேன் என்றும் நாசர் கூறினார்.