சிவகார்த்திகேயன் தவறவிட்ட 9 திரைப்படங்கள்!.. அதுல ஒன்னு மட்டும்தான் ஃபிளாப்பு!...

by சிவா |
சிவகார்த்திகேயன் தவறவிட்ட 9 திரைப்படங்கள்!.. அதுல ஒன்னு மட்டும்தான் ஃபிளாப்பு!...
X

Sivakarthikeyan: கோலிவுட்டின் முக்கிய நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். விஜய் டியியில் ஆங்கராக இருந்து படிப்படியாக முன்னேறி சினிமாவில் ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். அவரின் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் 300 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.

அமரன்: அமரன் படத்திற்கு பின் பெரிய இயக்குனர்களின் படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க துவங்கிவிட்டார். அதோடு, இதற்கு முன் காதல் கலந்த காமெடி படங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன் இப்போது சீரியஸான கதைகளையும் தேர்ந்தெடுத்து நடிக்க துவங்கிவிட்டார். தற்போது சுதாகொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார்.

பராசக்தி: இது 1965ம் வருடம் தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றிய கதை. இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது வேகமாக நடந்து வருகிறது. ஏற்கனவே, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். ஏற்கனவே சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் பராசக்தி படம் முடிந்த பின் அந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இந்த படத்திற்கு மதராஸி என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது.

மிஸ் பண்ணிய படங்கள்: ஒருபக்கம், பல முக்கிய படங்களை சிவகார்த்திகேயன் தவறவிட்டிருக்கிறார். அந்த படங்களின் லிஸ்ட்டை பார்ப்போம். பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் 18/9 பட வாய்ப்பு சிவகார்த்திகேயனுக்கு வந்திருக்கிறது. ஆனால், அவர் நடிக்கவில்லை. அட்லியின் ராஜாராணி படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக இருந்து பின்னர் ஆர்யா நடித்தார்.

சுசீந்திரன் இயக்கிய பாண்டியநாடு படத்திலும் சிவகார்த்திகேயன் நடிப்பதாக இருந்து பின்னர் விஷால் நடித்து ஹிட் ஆனது. சிவகார்த்திகேயனை அறிமுகம் செய்த பாண்டியராஜ் இயக்கத்தில் உருவான கடைக்குட்டி சிங்கம் படத்திலும் சிவகார்த்திகேயன் நடிப்பதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் அது நடக்காமல் போக அந்த படத்தில் கார்த்தி நடித்தார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான காத்து வாக்குல ரெண்டு காதல் படமும் சிவகார்த்திகேயன் நடிக்கவிருந்த படம்தான்.

அதேபோல், சித்தார்த் நடித்த சித்தா, கவின் நடித்த டாடா, சூர்யா நடித்த சூரரைப்போற்று படங்களின் கதைகளும் சிவகார்த்திகேயனுக்கு சொல்லப்பட்டது. ஆனால், அவரால் நடிக்க முடியவில்லை. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படத்திலும் சிவகார்த்திகேயன் நடிப்பதாக இருந்து அது நடக்காமல் போக சித்தார்த் நடித்தார். இப்படி சிவகார்த்திகேயன் மிஸ் பண்ணிய 9 படங்களில் இந்தியன் 2 மட்டுமே எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story