அவன் கூட ஏன் நடிச்ச?!. சிங்கமுத்துவிடம் சீறிய வடிவேலு!.. வைகைப்புயலின் கோரமுகம்!...

Actor vadivelu: மதுரையை சேர்ந்த வடிவேலு சினிமாவில் நடிக்கும் ஆசையில் ராஜ்கிரணிடம் அடைக்கலம் தேடினார். அவரும் தனது அலுவலகத்தில் ஆபிஸ் பாய் போல வைத்திருந்தார். அங்கு காப்பி, டீ வாங்கி கொடுக்கும் எடுபிடி வேலைகளை செய்து வந்த வடிவேலுவை ராஜ்கிரண் தான் தயாரித்து நடித்த ‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் கவுண்டமணியுடன் சில காமெடி காட்சிகளில் நடிக்க வைத்தார்.
அதன்பின் சின்னக்கவுண்டர், தேவர் மகன் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்து மக்களிடம் பிரபலமானார் வடிவேலு. ஒருகட்டத்தில் கிராம படங்கள் என்றாலே ‘காமெடிக்கு வடிவேலுவை கூப்பிடு’ என்கிற நிலை கோலிவுட்டில் உருவானது. வடிவேலும் தனது உடல்மொழி மற்றும் மதுரை பாஷையை பேசி ரசிகர்களை சிரிக்க வைத்தார்.
இவருக்கு வைகைப்புயல் என்கிற அடைமொழியும் கொடுக்கப்பட்டது. ஒருகட்டத்தில் கவுண்டமணி போல பெரிய ஹீரோக்கள் நடிக்கும் படங்களில் செகண்ட் ஹீரோ போலவே நடிக்க துவங்கினார் வடிவேலு. நம்பர் ஒன் காமெடி நடிகராக வலம் வந்த வடிவேலுவை நம்பி பல சின்ன சின்ன காமெடி நடிகர்கள் இருந்தார்கள். அவர்களில் தேவைப்படும் நடிகர்களை மட்டும் வடிவேலு பயன்படுத்தி வந்தார்.
மக்களை சிரிக்கவைக்கும் கலைஞனாக வடிவேல் இருந்தாலும் அவரின் நிஜமுகம் குரூரமானது. யாரையும் வளரவிட மாட்டார். வளர்த்தும் விடமாட்டார். தன்னுடன் நடிக்கும் காமெடி நடிகர்களுக்கு இயக்குனர் பத்தாயிரம் சம்பளமாக கொடுக்க வந்தால் ‘அவனுக்கு எதுக்கு அவ்வளவு சம்பளம்?. 2500 கொடுங்க போதும்’ என சொல்பவர்தான் வடிவேலு. அவ்வளவு நல்ல மனது அவருக்கு.
அதேபோல், தன்னுடன் நடிக்கும் காமெடி நடிகர்கள் வேறு காமெடி நடிகர்களுடன் நடித்தால் வடிவேலுவுக்கு பிடிக்காது. அப்படி யாரேனும் சென்று விவேக், சந்தானம் போன்றவர்களுடன் இணைந்து நடித்துவிட்டால் அவர்களை ஓரம் கட்டிவிடுவார். அதன்பின் அவர்களுக்கு வடிவேலு வாய்ப்பே கொடுக்கமாட்டார்.
வடிவேலுவுடன் பல படங்களிலும் இணைந்து காமெடி காட்சிகளில் நடித்திருந்த சிங்கமுத்து ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘வடிவேலு அவன் கூட நடிக்கிறவங்க வேறு யார் கூடயும் நடிக்கக்கூடாதுன்னு சொல்லுவான். நான் சந்தானத்துடன் நடித்தபோது என்ன கூப்பிட்டு ’அவன்கூட ஏன் நடிச்ச?. நம்ம டெக்னிக்கை நீ அவன்கிட்ட சொல்லிட்டியா?’ எனக்கேட்டான். சந்தானம்கூட எனக்கு காமெடி செட் ஆகுது. அதனால நடிப்பேன்னு சொன்னேன். அதுல வடிவேலுவுக்கு என் மேல் கோபம் இருந்தது’ என சொல்லியிருக்கிறார்.
பின்னாளில் தன்னிடம் சிஙக்முத்து நில மோசடி செய்ததாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் வடிவேலு. மேலும், தன்னைப் பற்றி ஊடகங்களில் சிங்கமுத்து பேசக்கூடாது என தடையும் வாங்கி வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.