விஜய் நடிக்காமல் தவறவிட்ட திரைப்படங்களின் லிஸ்ட்!.. அட எல்லாமே சூப்பர் ஹிட்டு!..

Published on: March 18, 2025
---Advertisement---

Vijay: முதல்வன் கதையில், ரஜினி, கமல் நடிக்க மறுத்தபின் விஜயிடம் அந்த கதையை சொன்னார் ஷங்கர். ஆனால், இவ்வளவு சிறிய வயதில் முதலமைச்சராக நடித்தால் செட் ஆகுமா என்கிற தயங்கிய விஜய் அதில் நடிக்க மறுத்துவிட்டார். அதன்பின் அர்ஜூனை வைத்து அப்படத்தை இயக்கி ஹிட் கொடுத்தார் ஷங்கர்.

இயக்குனர் சேரன் ஆட்டோகிராப் கதையை சூர்யா, விக்ரம், பிரபுதேவா என பலரிடமும் சொன்னார். அவர்கள் தொடர்ந்து படங்களில் நடித்து வந்ததால் இந்த கதையில் நடிக்கவில்லை. விஜயை சந்தித்தும் கதை சொன்னார் சேரன். ஆனால், அவரிடம் கால்ஷீட் இல்லை. எனவே, நாமே ஹீரோவாக நடிப்போம் என முடிவெடுத்து படத்தை இயக்கி நடித்தார்.

பூவே உனக்காக படம் மூலம் விஜய்க்கு வாழ்க்கை கொடுத்த விக்ரம் இயக்கிய படம் உன்னை நினைத்து. இந்த படத்தில் விஜய் நடிக்க சில நாட்கள் ஷூட்டிங் நடந்தது. ஆனால், ஏதோ பிடிக்காமல் விஜய் வெளியேறிவிட அவருக்கு பதில் சூர்யா நடித்து படம் வெளியானது. சண்டக்கோழி படத்தின் கதையை விஜயிடம்தான் சொன்னார் லிங்குசாமி. ஆனால், அவரால் நடிக்க முடியாமல் போக விஷால் நடித்தார். அதேபோல், ரன் பட கதையிலும் விஜய் நடிக்க மறுக்க மாதவனை வைத்து இயக்கி ஹிட் கொடுத்தார். லிங்குசாமி.

உள்ளத்தை அள்ளித்தா பட கதையை விஜயை மனதில் வைத்தே எழுதினார் சுந்தர்.சி. ஆனால், சில காரணங்களால் விஜய் நடிக்கவில்லை. எனவே, கார்த்திக்கை வைத்து இப்படத்தை இயக்கினார். தீனா படத்தின் கதையை முருகதாஸ் விஜயிடம் கூறினார். ஆனால், அவர் நடிக்காமல் போக அஜித் நடித்து அப்படம் ஹிட் அடித்தது.

வேல் பட கதையை ஹரி விஜயிடம் சொன்னார். ஆனால், விஜய்க்கு கதை பிடிக்கவில்லை. அதன்பின் அந்த கதையில் சூர்யா நடித்தார். சிங்கம் கதையும் விஜயிடம் சொன்னார் ஹரி. ஆனால், போலீஸ் வேடம் தனக்கு செட் ஆகாது என சொல்லி நடிக்க மறுத்துவிட்டார் விஜய். அதன்பின் சூர்யா நடித்து அப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது.

தூள் படத்தின் கதையை விஜயிடம் சொன்னார் தரணி. அப்போது காதல் கதைகளில் நடித்து வந்ததால் ஆக்‌ஷன் படம் இப்போது வேண்டாம் என சொல்லி விஜய் மறுத்துவிட விக்ரமை வைத்து அப்படத்தை இயக்கினார் தரணி. அனேகன் கதையை விஜயிடம் சொன்னார் கேவி ஆனந்த். ஆனால், கால்ஷீட் இல்லாததால் விஜய் நடிக்கவில்லை. எனவே, அப்படத்தில் தனுஷ் நடித்தார்.

கவுதம் மேனனின் யோகன் அத்தியாயம் ஒன்று படத்தில் விஜய் நடிப்பதாக அறிவிக்கப்பட்டு போஸ்டரெல்லாம் வெளியானது. ஆனால், சில காரணங்களால் விஜய் விலகிவிட்டார். அதன்பின் கதையில் சில மாற்றங்களை செய்து துருவ நட்சத்திரம் என்கிற பெயரில் சூர்யா நடிப்பதாக சொல்லி, பின்னர் அவரும் விலகிவிட கடைசியாக சியான் விக்ரம் நடித்தார். ஆனால், இந்த படம் இதுவரை வெளியாகவில்லை.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment