Categories: latest news

கேப்டனின் சின்னத்தில் நடிக்கவிருந்த விஜய்!. ஆனா கிரேட் எஸ்கேப்!. ஒரு பிளாஷ்பேக்!….

Actor Vijay: அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரால் சினிமாவுக்கு வந்தவர் நடிகர் விஜய். நாளைய தீர்ப்பு மூலம் நடிக்க துவங்கி அப்பாவின் இயக்கத்தில் மட்டுமே தொடர்ந்து நடித்து வந்தார். விக்ரமனின் இயக்கத்தில் நடித்த பூவே உனக்காக திரைப்படம் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. இந்த படம் மூலம்தான் விஜய்க்கு பெண் ரசிகைகளே உருவானார்கள்.

அதன்பின் பல காதல் கதைகளில் நடித்து ஒரு கட்டத்தில் ஆக்சன் ஹீரோவாக மாறினார். காதல், ஆக்‌ஷன், மாஸ் என ரஜினியின் ரூட்டில் பயணித்து முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக மாறினார். விஜயின் கில்லி படம்தான் தமிழ் சினிமாவில் 50 கோடி வசூல் செய்த முதல் திரைப்படம்.

ஒருகட்டத்தில் ரஜினிக்கே டப் கொடுக்கும் நடிகராகவும் மாறினார். இப்போதுவரை வசூலில் விஜய்தான் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார். கெரியரின் உச்சத்தில் இருக்கும்போதே அரசியலுக்கும் போய்விட்டார். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலை அவர் குறி வைத்திருக்கிறார். ஏற்கனவே கட்சி மாநாட்டில் பரபரப்பாக அரசியல் பேசிய விஜய் நேற்று கட்சி துவங்கி 2வது ஆண்டு விழாவில் பேசியபோதும் பல விஷயங்களை பேசினார்.

எல்லோருக்கும் முன்பே அரசியலுக்கு வந்தவர் விஜயகாந்த். விஜயின் சினிமா வளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தவர் இவர். விஜயை யாரும் கண்டுகொள்ளாத நிலையில் எஸ்.ஏ.சி இயக்கிய செந்தூரப்பாண்டி படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து கொடுத்தார். இந்த படம்தான் விஜயை பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது.

விஜயகாந்துக்கு தேர்தல் ஆணையம் கொடுத்த சின்னம் முரசு. இந்த தலைப்பில் விஜய் ஒரு படத்தில் நடிக்கவிருந்தார் என்பது தெரியவந்திருக்கிறது. விஜயை வைத்து திருப்பாச்சி, சிவகாசி படங்களை இயக்கிய பேரரசு அப்படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால், ஒரே இயக்குனருடன் 3 படங்கள் வேண்டுமா என யோசித்த விஜய் அந்த படத்திலிருந்து விலகிவிட்டார்.

இல்லையெனில் முரசு என்கிற தலைப்பில் விஜய் படம் ஒன்று உருவாகியிருக்கும். சிவகாசி படத்திற்கு பின் விஜயை வைத்து படமெடுக்க பேரரசு பலமுறை முயன்றும் முடியவில்லை. அந்த கோபத்தில்தான் பரத்தை ஆக்‌ஷன் ஹீரோவாக மாற்றி, அவருக்கு சின்ன தளபதி என பட்டமெல்லாம் கொடுத்து அவரை மாஸ் ஹீரோவை போல பில்டப்பெல்லாம் செய்து பழனி என்கிற படத்தை எடுத்தார். இந்த படம்தான் பரத்தின் மார்க்கெட்டையே காலி செய்தது.

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com

Recent Posts

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

2 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

3 hours ago

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

12 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

14 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

14 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

15 hours ago