ரஜினிக்கு அம்மாவா? தயவு செஞ்சு கொன்றுங்க.. கேரக்டரை கேட்டதும் கதறிய நடிகை

by ராம் சுதன் |
ரஜினிக்கு அம்மாவா? தயவு செஞ்சு கொன்றுங்க.. கேரக்டரை கேட்டதும் கதறிய நடிகை
X

தமிழ் சினிமாவில் ஒரு உன்னத நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவருடைய ஆரம்ப கால படங்களில் இவருக்கு ஹீரோயினாக நடித்த எத்தனையோ நடிகைகள் அதன் பிறகு இவருக்கு அம்மாவாகவோ அக்காவாகவோ சில படங்களில் நடித்திருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். உதாரணமாக ஸ்ரீவித்யா. சில படங்களில் அவருக்கு ஜோடியாகவும் தளபதி படத்தில் அவருக்கே அம்மாவாகவும் நடித்திருப்பார்.

அதேபோல கமல் படங்களிலும் ஸ்ரீவித்யா கமலுக்கு ஜோடியாகவும் நடித்திருக்கிறார். அவருக்கு அம்மாவாகவும் அக்காவும் நடித்திருக்கிறார். இப்படி எத்தனையோ நடிகைகளை உதாரணத்திற்கு சொல்லலாம். அதில் நடிகை அம்பிகா. எண்பதுகளில் கமல் ரஜினி இவர்களின் ஆஸ்தான நடிகையாக திகழ்ந்தவர் அம்பிகா. எப்படி ஸ்ரீதேவி ஒரு காலத்தில் ரஜினிக்கும் கமலுக்கும் ஜோடியாக பல படங்களில் நடித்து புகழ்பெற்றாரோ அதைப்போல அம்பிகாவும் ரஜினி கமல் இவர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

இவரை தான் ரஜினிக்கு அம்மாவாக ஒரு படத்தில் நடிக்க அழைப்பு கூப்பிட்டிருக்கிறார்கள். பதறிப் போனாராம் அம்பிகா. அது வேறு எந்த படமும் இல்லை. அருணாச்சலம் திரைப்படம் .ரஜினிக்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்று சொன்னதும் ரஜினிக்கு அம்மாவா? என அதிர்ச்சியுடன் கேட்டாராம். அதன் பிறகு தான் ரஜினியின் சிறு வயது கேரக்டருக்கு அம்மாவாக நடிக்க வேண்டும்.

அதுவும் ரஜினி குழந்தையாக பிறந்ததும் நீங்கள் இறந்து விடுவீர்கள் என்று சொன்னதும் அப்பாடா என்னை கொன்று விடுங்கள். அதுவே போதும் என சொன்னாராம் அம்பிகா. இதுவே அப்பா மகன் என ரஜினி நடித்து அதில் அப்பாவுக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்றால் கூட நடித்து விடுவேன். ஆனால் ரஜினிக்கு அம்மாவாக கமலுக்கு அம்மாவாக என நடிக்க சொன்னால் அது எப்படி முடியும் என ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் அம்பிகா.

அருணாச்சலம் படத்தில் ஃபிளாஷ்பேக்கில் அப்பா ரஜினி மகன் ரஜினியிடம் ஒரு வீடியோவில் அவரது அம்மாவை பற்றி சொல்லும் போது உன்னுடைய அம்மாவை பார்க்க வேண்டுமா? என அம்பிகாவின் புகைப்படத்தை மட்டும் காட்டி இதுதான் உன் அம்மா என சொல்லியிருப்பார் அம்பிகா. அவ்வளவுதான். அவருடைய கேரக்டர் அந்தப் படத்தில். இதற்கு போய் அம்பிகா ஷாக் ஆகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story