Categories: latest news

கமலை முதல் முதலாக நேரில் பார்த்த நடிகை… என்ன காரியம் செஞ்சிருக்காங்கன்னு பாருங்க!

கமலைத் திரையில் பார்க்கிறதைத் தாண்டி படப்பிடிப்பில் நேரில் பார்க்குற அனுபவம் எப்படி இருந்தது என சித்ரா லட்சுமணன் கேட்க, நடிகை தாரணி என்ன பதில் சொல்கிறார்னு பாருங்க.

இயக்குனர் பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை தாரணி. இவர் கமல், விஜயகாந்த், விஜய், அஜித், சரத்குமார் என பல நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். கவுண்டமணி, செந்தில், விவேக், வடிவேலு போன்ற பல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார். பனி விழும் மலர்வனம் உள்பட பல டிவி தொடர்களிலும் நடித்துள்ளார். கமல் உடன் உன்னால் முடியும் தம்பி படத்தில் நடித்துள்ளார். அப்போது என்ன அனுபவம் கிடைத்ததுன்னு தாரணி சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். வாங்க பார்க்கலாம்.

உன்னால் முடியும் தம்பி படத்துல தான் முதல்ல நடிச்சேன். கமல் தங்கை ரோல் நல்லா பண்ணனும்னு பாலசந்தர் சார் சொன்னாரு. பாவாடை, தாவணி தான் போட்டுருப்பேன். அது ஹோம்லி ரோல். சம்பளம் 5000 ரூபாய் தான். அந்தப் படப்பிடிப்பு 4 மாசம் நடந்தது. எப்படியும் 30 நாளுக்கு மேல நடந்திருக்கும்.

கமல் சாரோட வெறியை நான். ரசிகை கூட இல்லை. என்ன படம் ரிலீஸ் ஆனாலும் எங்க பாட்டியைக் கூட்டிட்டு நடிக்கப் போயிடுவேன். கமல் சாரோட நடிக்கப் போறேன்னு சொன்னதும் பயங்க எக்சைட்மெண்ட். அவரை நேரா பார்த்த உடனே அவரையே பார்த்துக்கிட்டு இருக்கேன். வேற எந்த இதுவும் இல்லை என்று அசந்து விட்டார் தாரணி. கமலுடன் நடித்த அனுபவம் எப்படின்னு கேட்ட போது இப்படி சொல்கிறார் தாரணி.

கமல் என்ன மனுஷன்யா அவரு? ஒவ்வொரு சீன்லயும் கமல் இதை மட்டும் இப்படி பண்ணனும்னு சொல்லிடுவாரு. அவ்ளோதான். எங்களுக்காக ரிகர்சல் பார்ப்பாங்க. அவருக்காக பார்க்க மாட்டாங்க. அப்போ அதை தூக்கி அல்வா சாப்பிடுற மாதிரி சாப்பிட்டுப் போய்க்கிட்டே இருப்பாரு. உத்தரத்துல தொங்குற சீன். அண்டாவுல சாதகம் பண்ற சீனு.

ஒரு கார்ல வந்துக்கிட்டு இருக்கும்போது ஒருத்தனை அடிப்பாங்க. அங்கேயே பார்த்துட்டு இருப்பாரு. பார்த்தது போதும்னு ஜெமினிகணேசன் சொல்வாரு. அப்போது அப்படியே அந்த முழி கமலுக்கு வெளியே வந்துரும். ஐயோ அப்பா என்ன மனு’ன். வீட்டை விட்டுப் போறேன்னு அண்ணிக்கிட்ட சொல்வாரு. அதுவும் என்ன மாதிரி சீன்? ஆனா அந்த சீன்ல நடிக்கும்போது நான் இல்லை. ஆனா நான் எல்லா சீன்லயும் நிறைய கூட வந்துருக்கேன். எல்லா சீன்லயுமே பயங்கரமா நடிச்சிருப்பாரு. கமல் நடிக்கிறதை அப்படியே மலைச்சிப் பார்க்க வேண்டியதுதான். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Published by
sankaran v