ஒரு வருஷத்துக்கு 45 படங்களா? இதுகூட என் அம்மாவுக்கு பத்தல.. அம்மாவை பற்றி நளினி சொன்ன சீக்ரெட்

புடவைக்காகவே வீடு: புடவைக்கென்றே தனி வீடு வைத்திருக்கும் ஒரே நடிகை யார் என்றால் அது நடிகை நளினி. எண்பதுகளில் ஒரு முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர் .அன்றைய காலத்தில் பெரும்பாலான நடிகைகள் சேலையையே அதிகமாக கட்டுவார்கள். இதனாலையே அவர்களுக்கான சேலைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அந்த வகையில் தான் கட்டும் சேலைகளுக்கு ஒரு வீடு பத்தாது என சேலைகள் வைப்பதற்காகவே வீடு வாங்கியவர் நளினி.
சினிமாவை விட்டு விலகல்: தமிழில் ஒத்தையடி பாதையிலே என்ற படத்தின் மூலம் முதன்முதலாக சினிமாவில் அறிமுகமானார் நளினி. அதிலிருந்து விஜயகாந்த், ராமராஜன் ,சத்யராஜ் ,மோகன் என அன்றைய காலகட்டத்தில் இருக்கும் முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்து ஒரு முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தார். நடிகர் ராமராஜனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நளினி. திருமணத்திற்குப் பிறகு சினிமாவை விட்டு விலகினார்.
இன்றுவரை இருக்கும் ஒற்றுமை: அதன் பிறகு தன் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நளினி ராமராஜனை விட்டு பிரிந்தார். இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வந்தாலும் இன்றுவரை மனதளவில் இருவருமே ஒன்றாக தான் வாழ்ந்து வருகின்றனர். இருவரும் தனித்தனியாக பேட்டி கொடுக்கும் பொழுது நளினி எப்பொழுதும் ராமராஜனை விட்டுக் கொடுத்து பேசியதே கிடையாது. அதேபோல ராமராஜனும் நளினியை விட்டுக் கொடுத்து பேசியதே கிடையாது.
எம்ஜிஆர் நடத்தி வைத்த திருமணம்: இன்றுவரை என் மனதில் அவர்தான் இருக்கிறார் என இருவருமே சொல்லி இருக்கிறார்கள். ஆனால் ஏதோ ஒரு காரணம் அவர்கள் பிரிந்து வாழ்வதற்கு சூழ்நிலையை உருவாக்கி விட்டது. இருவரின் திருமணத்தையும் எம்ஜிஆர் தான் முன் நின்று நடத்தினார். திருமணம் விவாகரத்து குழந்தை என தன் குடும்ப வாழ்க்கைக்கு பிறகு சீரியல்களில் நடிக்க ஆர்வம் காட்டினார் நளினி. பல சீரியல்களில் இவர் நடித்திருக்கிறார்.
இவ்ளோ படங்களா? அது மட்டுமல்ல ஒரு சில படங்களிலும் இப்போது தலைகாட்டி வருகிறார். இந்த நிலையில் தன்னுடைய சினிமா வாழ்க்கை எந்த அளவு பிசியாக இருந்தது என்பதை பற்றி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். தமிழ் மட்டுமல்ல தெலுங்கு கன்னடம் மலையாளம் என பிற மொழி படங்களிலும் ஏகப்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் நளினி. கிட்டத்தட்ட ஒரு வருடத்தில் தமிழில் மட்டும் 24 படங்களில் நடித்தாராம் .
அதாவது 1984 ஆம் ஆண்டு 24 படம், 1985 ஆம் ஆண்டு 25 படம். இது தமிழ் மட்டும். இதுபோக தெலுங்கு மலையாளம் கன்னடம் ஆகிய மொழிகளிலும் அதே ஆண்டுகளில் படங்களில் நடித்திருக்கிறேன் .எல்லாவற்றையும் சேர்த்து பார்த்தால் ஒரு வருடத்திற்கு 40 அல்லது 45 படங்களில் நடித்திருக்கிறேன் எனக் கூறினார். அவருடைய அம்மா கூட ஒரு நாளைக்கு 24 மணி நேரம் ஏன் ஆண்டவன் வைத்தான் என்று தெரியவில்லை. 60 மணி நேரம் வைத்திருக்கலாம், 365 நாட்களை எவண்டி வச்சான் .கூட கொஞ்சம் நாள்களை வைத்திருக்கலாம் என்றுதான் சொல்லிக் கொண்டே இருப்பாராம்.
அந்த அளவுக்கு தன் மகளை எப்பொழுதுமே சுறுசுறுப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்திருக்கிறார் நளினியின் அம்மா. அந்த காலத்தில் ஓடிக்கொண்டே தான் இருந்தேன் ,தூக்கம் என்பதே கிடையாது .எப்பொழுதுமே சினிமா நடிப்பு இப்படித்தான் என் வாழ்க்கை ஓடியது. என் அம்மாவும் இதைத்தான் விரும்பினார் என ஒரு பேட்டியில் நளினி கூறியிருக்கிறார்.