Categories: latest news

இயக்குனர் பாலாவை மிரள வைத்த ரேவதி… மனுஷன் இப்படியா பண்ணுவாரு?

தேவர்மகன் படத்தில் இடம்பெற்றிருந்த ‘இஞ்சி இடுப்பழகி’ பாடல் எவ்வளவு பிரபலமானது என்பது தெரியும். அந்தப் பாடலைப் பாடும் வாய்ப்பு முதலில் ரேவதிக்குத் தான் சென்றது. ஆனால் அவர் பாட முடியாமல் இருந்ததுக்குக் காரணம் இயக்குனர் பாலா. அதைப் பற்றி அவர் என்ன சொல்றாருன்னு பாருங்க.

பாலாவிடம் கேட்ட ரேவதி: மறுபடியும் திரைப்படத்தில் வரும் எல்லா பொறுப்புகளையும் இயக்குனர் பாலுமகேந்திரா எங்கிட்டதான் கொடுத்திருந்தார். படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டு இருந்தபோது நாளை ஒரே ஒரு மணி நேரம் அனுமதி வேண்டும் என்று ரேவதி பாலாவிடம் கேட்டுள்ளார். அதற்கு அதெல்லாம் முடியாது என்று கறாராக பதில் சொல்லி விட்டார் பாலா.

இந்த சம்பவம் நடந்து சில மாதங்களுக்குப் பின்னால் ரேவதியுடன் காரில் அமர்ந்து பயணம் செய்யக்கூடிய வாய்ப்பு பாலாவுக்குக் கிடைத்தது. அப்போது அந்தக் காரில் ‘இஞ்சி இடுப்பழகா’ என்ற பாடல் ஒலித்தது. அந்தப் பாடலைக் கேட்ட பாலா, ‘இந்தப் பாடலை நீங்களே பாடி இருந்தால் நல்லா இருந்துருக்கும் இல்ல’ன்னு ரேவதியைக் கேட்டார்.

மிரண்ட பாலா: அப்போது ரேவதியின் முகம் அப்படியே மாறிவிட்டதைப் பார்த்த பாலா மிரண்டு போய்விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். பாலாவை முறைத்துப் பார்த்த ரேவதி, ‘இந்தப் பாட்டைப் பாடத்தான் அன்னைக்கு ஒரு மணி நேரம் பர்மிஷன் கேட்டேன். நீதான் முடியாதுன்னு சொல்லிட்டீயே’ன்னு பாலாவிடம் சொன்னாராம். இந்தத் தகவலை பாலாவே ஒரு கட்டுரையில் பதிவு செய்துள்ளார். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

தேவர் மகன்: 1992ல் பரதன் இயக்கத்தில் கமல், சிவாஜி இணைந்து நடித்த படம் தேவர் மகன். இவர்களுடன் இணைந்து கௌதமி, ரேவதி, நாசர், காகா ராதாகிருஷ்ணன் உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜாவின் இசையில் அத்தனைப் பாடல்களும் பிரமாதம். குறிப்பாக இஞ்சி இடுப்பழகா பாடலை கமல், எஸ்.ஜானகி குழுவினர் பாடி இருந்தனர். படத்தில் கமல், ரேவதி நடித்திருந்தனர். இந்தப் பாடல் செம ஹிட். இப்போது கேட்டாலும் நம்மை சுண்டி இழுக்கும் ரகம் தான் இது.

Published by
sankaran v