நடிகர் அஜித்: தமிழ் சினிமாவில் இன்று ஒரு நம்பர் ஒன் நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித். சமீபத்தில் தான் அவருடைய நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. விடாமுயற்சி திரைப்படத்தை பொருத்தவரைக்கும் இரண்டு வருடங்களாக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த திரைப்படம். அதனால் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் ரசிகர்களை போதிய அளவு திருப்தி படுத்தவில்லை. ஆனால் இந்த படத்தில் அஜித் இதுவரை இல்லாத அளவில் ஒரு வித்தியாசமான நடிப்பை முயற்சி செய்து இருக்கிறார்.
அஜித்தின் பேஷன்: அஜித்துக்கு என ஒரு மாஸ் ஓப்பனிங் எல்லா படங்களிலும் இதுவரை இருந்து வந்தது. ஆனால் அது எதுவுமே இந்த படத்தில் இருக்கக் கூடாது என அஜித் சொல்லி இருந்தார். அதன் காரணமாகவே தான் ஒரு சாதாரண நடிகராக இந்த படத்தில் நடித்திருந்தார் அஜித். ஆனால் அது பல பேருக்கு பிடிக்கவில்லை .இப்படி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் அது எதைப் பற்றியும் கவலைப்படாமல் போர்ச்சுகளில் நடக்கும் கார் ரேசுக்காக தன்னை தயார்படுத்தி வருகிறார் அஜித்.
அகத்தியன்: சினிமாவில் உச்சத்தை அடைந்தாலும் தனக்கென ஒரு தனி வழியை அமைத்துக் கொண்டு அதற்கு ஏற்ப தன்னுடைய வாழ்க்கையை கொண்டு போகிறார் அஜித். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு பேஷன் இருக்கும். அது மாதிரி தான் அஜித்துக்கும் கார் ரேசில் ஆர்வம் அதிகமாக இருந்தது. அதுவும் அவர் சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலத்தில் இருந்தே இருந்தது .இந்த நிலையில் அஜித்தை வைத்து வான்மதி ,காதல் கோட்டை போன்ற படங்களை இயக்கிய அகத்தியன் அஜித்தை பற்றி சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
காதல் கோட்டை: காதல் கோட்டை படத்தின் கதையை வைத்துக்கொண்டு பல தயாரிப்பாளர்களிடம் ஏறி இறங்கினாராம் அகத்தியன். ஆனால் அந்தக் கதை யாருக்குமே பிடிக்கவில்லையாம் .கடைசியில் சிவசக்தி பாண்டியன் அந்த கதையை கேட்டு அதை பண்ணியிருக்கிறார். அதற்கு முன் வான்மதி படத்தில் அஜித்தை நடிக்க வைத்ததனால் அகத்தியனுக்கு அஜித்துடன் நல்ல ஒரு இணக்கம் இருந்திருக்கிறது.
அதன் காரணமாகத்தான் காதல் கோட்டை படத்திலும் நடிக்க வைத்திருக்கிறார் .அப்போது அஜித் மிகவும் அழகாக இருப்பார் .இள நங்கைகளுக்கு பிடித்தமான நடிகராக இருந்தவர் அஜித். அதுவும் இந்த படத்தில் பிளஸ் ஆக அமைந்தது. அஜித்தை பொறுத்த வரைக்கும் அவருக்கு என ஒரு தனி வழி உண்டு. அவருக்கு என்ன தோன்றுகிறதோ அதைத்தான் செய்வார். யாரையும் சார்ந்து வாழாமல் அவர் மனதிற்கு என்ன படுகிறதோ அதுவும் அவருக்கு பிடித்தமானதை செய்யக்கூடியவர். அப்போதே நான் நினைத்தேன் இவர் ஒரு பெரிய இடத்தை அடைவார் என .இவ்வாறு அகத்தியன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…