அஜித் தங்கியிருந்த ரூமுக்கு எதிரே ரூம் போட்டு அலப்பறை செய்த ரசிகர்கள்!.. நடந்தது இதுதான்!...

by சிவா |
Nerkonda Paarvai
X

Nerkonda Paarvai

Ajithkumar: கோலிவுட்டில் ஸ்டைலீஷ் ஹீரோவாக வலம் வருபவர் அஜித். அமராவதி படம் மூலம் நடிக்க துவங்கி பல படங்களிலும் ரொமான்ஸ் செய்யும் சாக்லேட் பாயாக வலம் வந்தார். அவரின் அழகு, நிறம், வசீகரம் ஆகிவற்றால் இவருக்கு நிறைய பெண் ரசிகைகளும் உண்டானார்கள்.

பல படங்களிலும் ரொமான்ஸ் செய்து வந்த அஜித் ஒரு கட்டத்தில் ஆக்‌ஷன் ஹீரோவாக மாறி பின்னர் பில்லா மற்றும் மங்காத்தா போன்ற திரைப்படங்கள் மூலம் மாஸ் ஹீரோவாக மாறினார். அஜித் என்றாலே ஸ்டைலீஷ், மாஸ் என்கிற இமேஜை இந்த படங்கள் ரசிகர்களிடம் உருவாக்கியது.

ஒருகட்டத்தில் அஜித்தும் அது போன்ற கதைகளில் நடிப்பதிலேயே ஆர்வம் காட்டினார். சினிமாவில் மாஸாக நடித்தாலும் நிஜவாழ்வில் அஜித் அப்படி இல்லை. அவர் மிகவும் எளிமையானவர். படப்பிடிப்பு தளத்தில் எல்லோருடனும் மிகவும் அன்பாக பழகும் சுபாவம் கொண்டவர். இதை அவருடன் நடித்த பலரும் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறோம்.

தனது ரசிகர்கள் தன்னுடைய படத்தை பார்ப்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் தனது ரசிகர் மன்றங்களையே அஜித் கலைத்தார். துபாயில் கார் ரேஸில் கலந்து கொண்டபோது கூட ‘அஜித் வாழ்க.. விஜய் வாழ்க-ன்னு சொல்றீங்க.. நீங்க எப்ப வாழப்போறீங்க?’ என கேட்டார்.

எங்கள் அஜித் இப்படி சொல்லியிருக்கிறார் என சொல்லி பெருமைபடுகிறார்களே தவிர அவர் கூறியதை அவரின் ரசிகர்கள் பின்பற்றவில்லை. அவர் எங்கு சென்றாலும் தல.. தல என கத்துகிறார்கள். துபாய் கார் ரேஸின்போதும் அங்கு சென்று அப்படித்தான் கத்தி கொண்டிருந்தார்கள். இத்தனைக்கும் தன்னை ‘தல’ என அழைக்க வேண்டாம் என அஜித் சொல்லியும் விட்டார்.

இந்நிலையில், நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்துடன் நடித்த பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பண்டே ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘அந்த படத்தில் நடித்தபோது அஜித்துக்கு ஒரு நட்சத்திர ஹோட்டலில் சூட் ரூம் போட்டு கொடுக்கப்பட்டிருந்தது. அவர் அங்கிருப்பதை தெரிந்த அவரின் ரசிகர்கள் சுமார் 10 பேர் அவரின் அறைக்கு எதிரிலேயே மற்றொரு சூட் ரூம் போட்டு தங்கினார்கள். அஜித் எப்போதெல்லாம் வெளியா வருகிறாரோ அப்போதெல்லாம் அவரைப் பார்த்து ‘தல.. தல..’ என கத்தினார்கள். அப்படி வெறித்தனமான ரசிகர் கூட்டம் அஜித்துக்கு உண்டு’ என அவர் பேசியிருந்தார்.

Next Story