எவர்கிரீன் பாடல்! அமராவதிக்கு பிறகு அஜித் நடிக்க இருந்த படம்.. நல்ல பாட்ட மிஸ் பண்ணிட்டாரே

Published on: March 18, 2025
---Advertisement---

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். தற்போது கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். அவருடைய நடிப்பில் கடைசியாக வெளிவந்த விடாமுயற்சி திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது. அடுத்ததாக வரும் ஏப்ரல் பத்தாம் தேதி குட்பேட்அக்லி திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கின்றது. அந்த படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதுவரை அஜித் நடித்து வெளியான ஹிட் படங்களின் கலவையாக அந்த படத்தில் மொத்தமாக ஆதிக் கொடுத்திருப்பது இந்த படத்தின் மீது ஒரு ஹைப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வாலி ,மங்காத்தா ,தீனா, வில்லா என அஜித் மாஸ் ஆக நடித்த கேரக்டர்களின் கலவை ஒரு சேர குட்பேட்அக்லி படத்தில் அமைந்திருப்பது ஒட்டுமொத்த ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் இயக்குனர் விக்ரமன் அஜித்தை பற்றி சமீபத்திய ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அஜித் நடித்த முதல் திரைப்படம் அமராவதி. அந்த படத்திற்கு பிறகு அஜித்திற்கு எதிர்பார்த்த அளவு வாய்ப்பு வரவில்லை. அதே நேரம் பைக் ரேசிலும் ஈடுபட்ட வந்தார். அமராவதி திரைப்படத்திற்கு பிறகு அஜித் நடிக்க இருந்த திரைப்படம் புதிய மன்னர்கள் என விக்ரம் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.

அந்த படத்தில் அவரை நடிப்பதற்கு கேட்டபோது அவருடைய உதவியாளர் மூலம் இந்த படத்தில் என்னால் நடிக்க முடியாது என கூறிவிட்டாராம் அஜித். ஏனெனில் அந்த நேரத்தில் தான் அவருக்கு ஏதோ முதுகில் அறுவை சிகிச்சை செய்திருந்தார்களாம். ஒருவேளை அந்த படத்தில் நடித்திருந்தால் கட்டும் சேலை மடிப்பில் நான் கசங்கி போனேன்டி என்ற பாடலுக்கு அஜித் ஆடி இருந்திருப்பார்.

அவர் முடியாது என சொன்னதனால் தான் பாபு கணேஷ் அந்த படத்தில் நடனமாடியிருந்தார் என விக்ரமன் அந்த பேட்டியில் கூறினார். அதன் பிறகு உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படத்தில் நடிக்க அந்த படத்தின் தயாரிப்பாளர் தான் அஜித்தை அணுகினார். அப்போது கூட காதல் கோட்டை, ஆசை போன்ற தொடர் ஹிட் படங்களை கொடுத்துவிட்டு இந்த படத்தில் எப்படி நடிப்பார் என விக்ரமன் அந்த தயாரிப்பாளரிடம் கேட்டாராம்.

அஜித்தை வரச் சொல்லி பேசி இருக்கிறார்கள் .உடனே அஜித் எந்த கேரக்டர் வேண்டுமானாலும் பரவாயில்லை. ஏன் வில்லனாக நடிக்க வேண்டுமா நடிக்கிறேன் என சொல்லி உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படத்தில் நடித்தாராம் அஜித். ஒருவேளை அவர் தோல்வியில் இருக்கும் பொழுது நான் புதிய மன்னர்கள் படத்தில் அவருக்கு வாய்ப்பு கொடுத்தேன் .அதை நினைத்து கூட எனக்காக இந்த படத்தில் நடித்திருக்கலாம் என்று விக்ரமன் கூறினார்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment