நாளைக்கு போட்டோ சூட்.. முதல் நாள் ஹாஸ்பிட்டலில் அஜித்.. ஹேர் ஸ்டைலிஸ்ட் சொன்ன சீக்ரெட்

by ராம் சுதன் |
நாளைக்கு போட்டோ சூட்.. முதல் நாள் ஹாஸ்பிட்டலில் அஜித்.. ஹேர் ஸ்டைலிஸ்ட் சொன்ன சீக்ரெட்
X

தமிழ் சினிமாவில் ஒரு மெகா ஸ்டார் ஆக இருப்பவர் நடிகர் அஜித். தற்போது கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் தான் துபாயில் நடந்த 24ஹெச் கார்பந்தயத்தில் அவருடைய அணி மூன்றாவது இடம் பிடித்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்தது. அதனைத் தொடர்ந்து போர்ச்சுக்கலிலும் நடக்கும் கார்பந்தயத்தில் கலந்து கொள்வதற்காக சென்று இருக்கிறார்.

அதற்கான தகுதி சுற்றிலும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் அஜித். கிட்டத்தட்ட அக்டோபர் மாதம் வரை உலகெங்கிலும் நடக்கும் கார் பந்தயத்தில் அஜித்தின் அணி கலந்து கொள்ள இருக்கிறது. அதன் பிறகு தான் அடுத்த பட அறிவிப்பு என்ன என்பது தெரியவரும். தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி போன்ற படங்களில் நடித்துள்ளார் அஜித். அஜித்தை பொருத்தவரைக்கும் சினிமாவில் எப்பொழுது நடிக்க வந்தாரோ அதற்கு முன்பிருந்தே கார் ரேசிலும் பைக் ரேசிலும் ஆர்வம் கொண்டவர்.

ஏகப்பட்ட விபத்துக்களில் சிக்கி அவர் உடம்பும் முழுவதும் பல காயங்கள் ஏற்பட்டிருக்கிறது. அதற்காக எத்தனையோ அறுவை சிகிச்சைகளும் செய்து இருக்கிறார். அஜித் ஆரம்ப காலங்களில் பட வாய்ப்புகளுக்காக ஏங்கிக் கொண்டிருந்த பொழுது வந்த வாய்ப்புகள் எல்லாம் இவருக்கு ஏற்பட்ட விபத்துக்களால் மிஸ் ஆகி இருக்கின்றன. இருந்தாலும் படங்களின் வாய்ப்புகளையும் தவறவிடக்கூடாது என்பதற்காக சில சமயங்களில் காயங்களை கூட பொருட்படுத்தாமல் எப்படியாவது நான் வந்து நடித்துக் கொடுக்கிறேன் என ஒரு சில படங்களில் இவர் நடித்தும் கொடுத்திருக்கிறார்.

அப்படித்தான் படிப்படியாக முன்னேறி இன்று ஒரு முன்னணி நடிகராக உயர்ந்திருக்கிறார் நடிகர் அஜித். இந்த நிலையில் வாலி படத்தின் போட்டோ சூட் சமயத்தில் கூட இவர் அறுவை சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் தான் இருந்திருக்கிறார். மறு நாள் வாலி படத்திற்காக போட்டோ ஷூட் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததாம். அதற்கு முதல் நாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்திருக்கிறார்.

அப்போது நீளமான தாடி முகமே மாறிய தோற்றம் என அஜித் மாதிரியே இல்லையாம். அந்த நேரத்தில் அஜித் தன்னுடைய ஹேர் ஸ்டைலிஸ்ட் ராஜ் பாண்டியனை அஜித் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மருத்துவமனைக்கு வா என அழைத்திருக்கிறார். அவரும் வர மருத்துவமனையில் யாரென்று கண்டுபிடிக்காத முடியாத அளவுக்கு அஜித் இருந்திருக்கிறார்.

உடனே நாளை போட்டோ சூட் இருக்கிறது. எனக்கு ஹேர் கட் செய்யும்படி கேட்டிருக்கிறார். அங்கு மருத்துவமனையில் பெட் மட்டுமே தான் இருக்கும். அதனால் வெஸ்டர்ன் டாய்லெட்டில் உட்கார வைத்து அங்கேயே அவருடைய ஹேர் ஸ்டைலிஸ்ட் அஜித்துக்கு ஹேர் கட் செய்தாராம்.

Next Story