வரமாட்டேனு சொன்ன கமலிடம் அமீர் போட்ட சபதம்.. இப்படியொரு சுவாரஸ்ய சம்பவமா?

தீவிர ரசிகர் அமீர்: ஒரு சாதாரண ரசிகனாக இருந்து கூட அவர்களுக்கு பிடித்தமான நடிகர்களை சந்தித்து விடலாம். ஆனால் திரை துறையில் பிரபலமாக இருக்கும் சில பேர் சில நடிகர்களுக்கு ரசிகர்களாக இருக்கும் பொழுது அவர்களின் பின்னணி வெயிட்டாக இருந்தால் மட்டுமே அந்த நடிகர்கள் அவர்களை சந்திக்க விரும்புகிறார்கள். இதற்கு ஒரு உதாரணம் தான் அமீர் கமல் சம்பந்தப்பட்ட செய்தி.
முதல் படம்: மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அமீர் .அதுவரை மதுரையில் தனக்கு பிடித்தமான வேலையை செய்து கொண்டு இருந்த அமீர் சினிமாவில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்ற வெறியோடு கோடம்பாக்கத்திற்கு வந்தார். ஆரம்பத்தில் உதவியாளராக இருந்து பின்னர் மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தை சூர்யாவை வைத்து இயக்கினார்.
கமல் வரவேண்டும்: அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு கமல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாராம். ஆனால் அமீர் கமலின் தீவிர ரசிகர் என கமலுக்கு அதுவரை தெரியாது. அதன் பிறகு ராம் திரைப்படத்தின் பொழுது அந்தப் படத்தின் துவக்க விழாவிற்கு கமல்தான் வரவேண்டும் என அமீர் ஆசைப்பட்டு இருக்கிறார். அப்போது கமலுக்கு பிஆர்ஓவாக இருந்தவர் நிகில் முருகன் .அவரை தொடர்பு கொண்டு அமீர் எத்தனையோ முறை கமல் வரவேண்டும் என தனது ஆசையை கூறி இருக்கிறார்.
எதிர்பார்ப்பு: அதற்கு நிகில் நான் சொல்லிவிட்டேன். அவர் என்ன சொல்கிறார் என கேட்டு சொல்கிறேன் என தொடர்ந்து இதே பதிலைத்தான் கூறினாராம். இன்னொரு பக்கம் பாலு மகேந்திராவும் அந்த விழாவிற்கு வர வேண்டும் என ஆசைப்பட்டிருக்கிறார். அவருக்கும் முயற்சி செய்து இருக்கிறார் அமீர். ஒரு பக்கம் பிடித்த நடிகர் ,இன்னொரு பக்கம் பிடித்த இயக்குனர் இரண்டு பேரும் இருந்து அந்த ராம் திரைப்படத்தின் துவக்க விழாவை சிறப்பிக்க வேண்டும் என்பது அமீரின் ஆசை.
அமீர் போட்ட சபதம்: ஆனால் பாலு மகேந்திராவின் உதவியாளர் ஒருவர் சார் ரொம்ப பிசியாக இருக்கிறார். அவரால் வர முடியாது என சொல்லி போனை வைத்து விட்டாராம். இந்த பக்கம் நிகில் முருகனும் கமல் சாரிடம் சொல்லி விட்டேன் சொல்லிவிட்டேன் என இதையே நான் சொன்னாராம். ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க முடியாத அமீர் பரவாயில்லை அவர் வரவும் வேண்டாம் .ஆனால் ஒரு நாள் நான் கண்டிப்பாக இந்த சினிமாவில் பெரிய ஆளாக வந்து அதன் பிறகு கமல் சாரை சந்திக்கிறேன் என ஒரு சபதம் போட்டாராம்.
ரஜினி கமல் ஒரே நேரத்தில் ரிலீஸ்: இப்படி பல சபதங்களை நான் போட்டிருக்கிறேன் என கிண்டலாக ஒரு பேட்டியில் கூறினார் அமீர். அதன் பிறகு பருத்திவீரன் திரைப்படத்தின் விழாவிற்கு கமல் வந்தாராம். ஆனால் அது சிவக்குமாருக்காக வந்தார் என அமீர் கூறினார். அதன் பிறகு ஒரு சமயம் ரஜினி நடித்த ஒரு படமும் கமல் நடித்த மும்பை எக்ஸ்பிரஸ் படமும் ஒன்றாக ரிலீஸ் ஆனதாம். அப்போது அமீரிடம் யார் படத்தை பார்ப்பீர்கள் என கேட்டதற்கு மும்பை எக்ஸ்பிரஸ் என சொன்னாராம். இந்த செய்தி கமல் காதுக்கு போக அந்த அமீரின் பின்னணி என்ன என கேட்டிருக்கிறார் .
அதன் பிறகு தான் தெரிந்ததாம் அமீர் தன்னுடைய தீவிர ரசிகன் என்று .அதுவும் கமலின் கட்சியில் நிர்வாகியாக இருக்கும் அழகர் என்பவர் அமீருக்கு மிகவும் நெருக்கமானவராம். அந்த நிர்வாகி சொன்ன பிறகுதான் தன்னுடைய தீவிர ரசிகன் அமீர் என கமலுக்கு தெரிய வந்திருக்கிறது .இந்த சம்பவத்திற்கு பிறகு தான் அமீருடன் நெருக்கமானாராம் கமல். அதன் பிறகு விஸ்வரூபம் திரைப்படத்தின் பிரச்சினையின் போது கமலுடன் கூடவே இருந்தேன் என்றும் அமீர் கூறினார் .சமீபத்தில் கூட கமலை சந்தித்தபோது தக் லைஃப் படத்தின் டீசரை பார்த்தீர்களா என கேட்டாராம் கமல். இதை ஒரு பேட்டியில் அமீர் கூறி இருக்கிறார்.