நடன இயக்குனரையே அசர வைத்த அமிதாப்பச்சன்… அப்படி என்னதான் நடந்தது?

Published on: March 18, 2025
---Advertisement---

திரை உலகில் ஒருவர் தொடர்ந்து நடிப்பதற்கும், வெற்றிகரமாக ஒரு நடிகராக வலம் வருவதற்கும் வயது ஒரு தடை இல்லை என்பதை இன்று வரை நிரூபித்துக் கொண்டு இருக்கும் ஒரு மாபெரும் கலைஞர் நடிகர் அமிதாப்பச்சன்.

தமிழில் லிங்குசாமி இயக்கத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் ரன். அந்தப் படத்தை இந்தியில் இயக்கியவர் ஒளிப்பதிவாளர் ஜீவா. அதுல ஹீரோ அபிஷேக் பச்சன். அந்தப் படத்துல முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்தவர் அமிதாப்பச்சன்.

ராஜூசுந்தரம்: அந்தப் படத்தில் நடன இயக்குனராக இருந்த ராஜூசுந்தரம் ஒரு கடினமான நடன அசைவை அமிதாப்பச்சனுக்குத் தொடர்ந்து சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருந்தார். அதைப் பார்த்துக் கொண்டு இருந்த அமிதாப்பச்சனுக்கு கோபம் கூடிக் கொண்டே இருந்தது.

ராஜூசுந்தரத்தைப் பக்கத்தில் அழைத்த அவர் இந்த நடன அசைவு எல்லாம் யாருக்கு? உனக்கா, எனக்கா? என் வயசு என்னன்னு கொஞ்சமாவது யோசிச்சியா? அவர் அப்படிக் கேட்ட உடனே ராஜூசுந்தரத்துக்கு முகம் அப்பபடியே மாறியது.

தீர்மானித்த அமிதாப்பச்சன்: என்னதான் இருந்தாலும் அமிதாப்பச்சனுக்கு அவ்வளவு கடினமான அசைவுகளை எல்லாம் கொடுத்துருக்கக் கூடாதுன்னுதான் அந்த அரங்கத்தில் உள்ள எல்லாருமே நினைச்சாங்க. இன்றைய நடன அசைவு எப்படி இருக்கணும்கறதை நானே தீர்மானிச்சிக்கிடுறேன்னு படப்பிடிப்புக்கு தயாரானார் அமிதாப்பச்சன். படப்பிடிப்புத் தொடங்கியது.

கடினமான நடன அசைவு: பாட்டைப் போட்டாங்க. ராஜூசுந்தரம் எந்தமாதிரியான நடன அசைவுகளை அமிதாப்புக்குப் போட்டாரோ அதுல இருந்து இம்மி அளவு கூட பிசகாம அப்படியே நடனம் ஆடிக்காட்டினார் அமிதாப்பச்சன். அரங்கில் உள்ள அத்தனை பேரும் கைதட்டினர். ஆடி முடித்ததும் ராஜூசுந்தரம் அருகில் வந்து என்ன நான் கோவிச்சிக்கிட்டேன்னு பார்த்தியா?

அர்ப்பணிப்பு: நானும் சின்னப்பையன்தான்னு அமிதாப்பச்சன் கண்ணடித்துச் சொன்னாராம். அவர் இன்றும் வெற்றிகரமான நடிகராக உலா வருகிறார் என்றால் அவருடைய இந்த அர்ப்பணிப்பு தான் காரணம். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பகிர்ந்துள்ளார்.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment