ரஹ்மான் அப்பவே சொன்னார்!. நான்தான் கேட்கல!.. ஃபிளாப் கொடுத்து புலம்பும் இயக்குனர்...

by சிவா |
vikraman
X

AR Rahman: ஒரு கதை சினிமாவாக மாறுவதில் இரண்டு வகை இருக்கிறது. ஒரு இயக்குனருக்கு ஒரு கற்பனை உருவானவுடன் தனது உதவியாளர்களுடன் அமர்ந்து அந்த கதை பற்றி பேசிப்பேசி மெருகேற்றுவார்கள். கதை முழு வடிவம் பெற்றவுடன் கட்சிகளை எழுதி முழுக்கதையை உருவாக்கி அதன்பின் படப்பிடிப்புக்கு செல்வார்கள்.

கதை விவாதம்: பாலா போன்ற இயக்குனர்கள் எல்லாம் உதவி இயக்குனர்களுடன் விவாதிக்கமாட்டார்கள். தனக்கு பழக்கமுள்ள ஜெயமோகன் போன்ற கதாசிரியர் மற்றும் எழுத்தாளர்களிடம் கதையை பற்றி விவாதிப்பார்கள். மணிரத்னம் உள்ளிட்ட சில இயக்குனர்கள் முழுக்கதையையும் அவர்களே எழுதி ஷூட்டிங் போய்விடுவார்கள்.

இயக்குனர் சொல்லும் கதையில் உதவி இயக்குனர்கள் உள்ளிட்ட சிலர் சில மாற்றங்களை செய்ய சொல்வார்கள். அது சரி என பட்டால் சில இயக்குனர்கள் ஏற்றுக்கொள்வார்கள். அதனாலேயே படம் வெற்றி பெறுவதும் உண்டு. சில இயக்குனர்கள் அதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதனாலேயே ஒரு படம் தோல்வி அடைவதும் உண்டு.

புதிய பாதை போட்ட விக்ரமன்: தமிழ் சினிமாவில் அதிரடி சண்டைக்காட்சிகள், வன்முறை, ரத்தம், கொடூரமான வில்லன் என இவை எதுவுமில்லாமல் மென்மையான படங்களை இயக்கியவர் விக்ரமன். முதல் வசந்தம், பூவே உனக்காக, வானத்தை போல, சூர்யவம்சம் போன்ற படங்களை இயக்கியவர். இவர் இயக்கத்தில் விக்ரம், மோகினி, விவேக், தாமு உள்ளிட்ட பலரும் நடித்து 1994ம் வருடம் வெளியான திரைப்படம்தான் புதிய மன்னர்கள்.

அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றுவதால் கல்லூரி மாணவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்கிற புரட்சிகரமான கதையை இப்படத்தில் சொல்லியிருந்தார் விக்ரமன். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். ‘நீ கட்டும் சேல மடிப்புல நான் கசங்கிப்போனேன்டி’ பாடல் ஹிட்டானதே தவிர படம் ஓடவில்லை.

ஏ.ஆர்.ரஹ்மான்: இந்நிலையில், இப்படம் பற்றி பேசிய விக்ரமன் ‘இந்த படம் உருவானபோது ஏ.ஆர்.ரஹ்மான் எனக்கு ஒரு அறிவுரை சொன்னாரு. நான்தான் கேட்கல. படத்தில் நிறைய காட்சிகளில் பழைய பாடல்களை வச்சிருப்பேன். இதப்பார்த்துட்டு ரஹ்மான் சார் ‘இது ஒரு சீரியஸான படம். இப்படி நடுவுல நடுவுல பாட்டு வந்தா அது படத்தோட வீரியத்தையே குறைச்சிடும். அதெல்லாம் தூக்கிடுங்க’ என சொன்னார். நான் அதை செய்யவில்லை. ஆனா, அவர் சொன்னது 100 சதவீதம் சரி’ என சொல்லியிருக்கிறார்.

Next Story