பாட்டி செத்துப் போச்சி!.. ஓ மை கடவுளே படத்துக்கு பிளாஷ்பேக் சொன்ன அஸ்வத் மாரிமுத்து!...

by சிவா |
பாட்டி செத்துப் போச்சி!.. ஓ மை கடவுளே படத்துக்கு பிளாஷ்பேக் சொன்ன அஸ்வத் மாரிமுத்து!...
X

Aswath Marimuthu: சினிமாவில் இயக்குனர் வாய்ப்பு கிடைப்பது என்பது சுலபமில்லை. அப்பா தயாரிப்பாளராக இருந்தால் சுலபமாக இயக்குனர் ஆகிவிட முடியும். இல்லையெனில் போராட வேண்டும். தரமணி நடிப்பு கல்லூரியில் இயக்கம் பற்றி படித்தவர்கள் குறும்படங்கள் மூலம் தன்னை புரமோட் செய்து கொள்வார்கள். அதை வைத்து ஷங்கர் போன்ற பெரிய இயக்குனரிடம் உதவி இயக்குனராக சேர்ந்து சில படங்களில் வேலை செய்துவிட்டு இயக்குனர் ஆகிவிடுவார்கள்.

குறும்படம் மூலம் வாய்ப்பு: இந்த பின்னணி இல்லாதவர்கள் யாரேனும் இயக்குனர்களிடம் உதவியாளராக சேர்ந்துவிடுவார்கள். சிலருக்கு அதுவும் கிடைக்காது. சிலர் குறும்படங்களை இயக்கிவிட்டு யாரிடமும் உதவி இயக்குனராக சேராமல் நேரிடையாக படங்களை இயக்க வந்துவிடுவார்கள். லோகேஷ் கனகராஜெல்லாம் இப்படி வந்தவர்தான்.

பிரதீப் ரங்கநாதன்: இந்த வரிசையில் இயக்குனரானவர்தான் அஸ்வத் மாரிமுத்து. இவர் கல்லூரியில் பிரதீப் ரங்கநாதனுக்கு சீனியர். பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தை இயக்கிய போது அந்த படத்தில் சில நாட்கள் வேலை செய்து அவருக்கு சில விஷயங்களை சொல்லிக் கொடுத்தவர். அஸ்வத் இயக்கிய முதல் திரைப்படம் ஓ மை கடவுளே.

அசோக் செல்வனும், ரித்திகா சிங்கும் இந்த படத்தில் நடித்திருந்தார்கள். ஒரு பெண்ணை தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் தவறு செய்துவிட அதை புரிந்துகொள்ளும் அவனுக்கு இரண்டாம் வாய்ப்பு கொடுக்கப்பட்டால் என்ன செய்வான் என்பதை சுவாரஸ்யமாக திரைக்கதை அமைத்திருந்தார்.

டிராகன்: இந்த படம் ஹிட் அடிக்கவே இப்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து டிராகன் படத்திருக்கிறார். கடந்த 21ம் தேதி வெளியான இந்த திரைப்படம் 100 கோடி வசூலை எட்டிவிட்டது. கல்லூரியில் பொறுப்பின்றி சுற்றும் ஒரு இளைஞன் கல்லூரி படிப்புக்கு பின் என்ன ஆகிறான் என்பதுதான் கதை. ஓ மை கடவுளே போலவே இந்த படத்திலும் 2வது வாய்ப்பு என்கிற மேட்டரை வைத்து திரைக்கதையை எழுதியிருக்கிறார்.

ஓ மை கடவுளே: இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய அஸ்வத் மாரிமுத்து ‘என்னுடைய ஷார்ட் பிலிம்ல அசோக் செல்வன் நடிச்சான். படம் முக்காவாசி முடிந்தபின் அவரின் பாட்டி இறந்துட்டாங்க. மழை வேற பயங்கரமா பெய்தது. அதிக பட்ஜெட்ல எடுத்த ஷார்ட் பிலிம் அது. ‘மச்சான் நீ வேணா வேற யாரையாவது வச்சி பண்ணிக்கோ. எனக்காக வெயிட் பண்ணாத’ன்னு சொன்னான். நீ இல்லனா நான் பண்ண மாட்டேன் என சொன்னேன். உடனே அன்னைக்கு நைட்டே கிளம்பி அடுத்தநாள் காலையில வந்துட்டான். அந்த ஷார்ட் பிலிம்க்கு நான் பெஸ்ட் டைரக்டர், அசோக் பெஸ்ட் ஆக்டர் விருதுலாம் வாங்கினோம். அன்னைக்கு என்னுடைய முதல் படம் அசோக் கூடாதான்னு முடிவெடுத்தேன். அதுதான் ஓ மை கடவுளே’ என கூறியிருக்கிறார்.

Next Story