Categories: latest news

இப்ப ஏழரை சனி!. இன்னும் 10 வருஷம் கழிச்சிதான் சினிமா!. விஜய் சேதுபதி எடுத்த அந்த முடிவு!…

Vijay sethupathi: சினிமாவை சேர்ந்த எந்த பின்னணியும் இல்லாமல் திரையுலகில் நுழைந்து திரைப்படங்களில் நடிக்க துவங்கி வெற்றிகளை கொடுத்து தனக்கென ஒரு இடத்தை பிடிப்பது என்பது சுலபமில்லை. பல முயற்சிகள், அவமானங்கள், அசிங்கங்களை தாண்டி நம்பிக்கையோடு போராட வேண்டும். அப்போதுதான் வெற்றி கிடைக்கும். அந்த வரிசையில் விஜயகாந்த், அஜித், சிவகார்த்திகேயன் வரிசையில் விஜய் சேதுபதியையும் சொல்லலாம்.

துபாயில் வேலை: துபாயில் ஒரு கம்பெனியில் அக்கவுண்டண்ட் வேலை செய்து வந்தவருக்கு சினிமாவின் மீது ஆசை ஏற்பட சென்னை வந்தார். இத்தனைக்கும் அந்த முடிவை அவர் எடுத்தபோது அவருக்கு திருமணம் ஆகியிருந்தது. சினிமாவில் முயற்சி செய்பவர்கள் திருமணம் செய்துகொள்ளமாட்டார்கள். ஏனெனில், திருமணம் ஆகிவிட்டால் குடும்பத்தை காப்பாற்ற ஒரு வேலைக்கு செல்ல வேண்டியிருக்கும். சினிமாவில் நுழைந்து பணம் சம்பாதிப்பது என்பது நிச்சயம் இல்லாதது.

சின்ன சின்ன வேடங்கள்: ஆனால், விஜய் சேதுபதி துணிச்சலாக அந்த முடிவை எடுத்தார். சின்ன சின்ன வேடங்களில் பல படங்களிலும் நடித்தார். தனுஷ் ஹீரோவாக நடித்த புதுப்பேட்டை படத்தில் கூட சில காட்சிகளில் வருவார். சசிக்குமார் ஹீரோவாக நடித்த சுந்தரபாண்டியன் படத்தில் கூட வில்லனாக நடித்திருப்பார்.

தனக்கென தனி இடம்: பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும் படங்கள் வெற்றி பெற்றதால் விஜய் சேதுபதி கவனிக்கப்பட்டார். ஹீரோயிசம் காட்டாத, பன்ச் வசனம் பேசாத, இயல்பாக நடிக்கும் விஜய் சேதுபதியை எல்லோருக்கும் பிடித்திருந்தது. தொடர்ந்து பல படங்களிலும் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

ஒருகட்டத்தில் வில்லனாகவும் நடிக்க துவங்கினார். அப்படி அவர் நடித்து வெளியான மாஸ்டர், விக்ரம், ஜவான் போன்ற படங்கள் பாக்ஸ் ஆபிசில் பட்டையை கிளப்பியது. ஒருபக்கம், கடைசி விவசாயி போன்ற படங்களிலும் நடிப்பார். சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக நடித்து தேசிய விருதை வாங்கினார்.

பயமுறுத்திய ஜாதகம்: இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய அவர் ‘உங்களுக்கு ஏழரை சனி பிடிச்சிருக்கு. சினிமாவில் கொடிகட்டி பறக்க இன்னும் 10 வருஷம் ஆகும். நீங்க திரும்ப ஃபாரினுக்கே போய்டுங்க’ என சொன்னாங்க. அதற்கு நான் ‘ஏழரை சனி பிடிச்சா ரொம்ப நல்லது. அவர் கெடுதல் பண்ணமாட்டார். அவர் கத்துக்க சொல்லுவாரு. 10 வருசம் கழிச்சி நான் வந்த உடனே சினிமாவில் தூக்கி என்னை உச்சத்தில் வைப்பாங்களா?.. எனக்கு வேலை தெரியணும்.. வேலையை எவன் கத்து கொடுப்பான்?.. இங்க இருந்தாத்தான் கத்துக்க முடியும். அதனால நான் இங்க இருந்து கத்துக்குறேன்னு சொன்னேன். சினிமாவுக்கு நான் கஷ்டப்பட்டு வரல.. கத்துக்கிட்டு வந்தேன்’ என சொல்லியிருக்கிறார்.

Published by
சிவா