மூனு மீட்டிங் ஓவர்!. ரஜினி சார் ரெடி!.. வெயிட் பண்ணுங்க!.. அட்லி கொடுத்த செம அப்டேட்!..

by சிவா |
மூனு மீட்டிங் ஓவர்!. ரஜினி சார் ரெடி!.. வெயிட் பண்ணுங்க!.. அட்லி கொடுத்த செம அப்டேட்!..
X

Atlee Rajini: தமிழ் சினிமாவில் விஜயை வைத்து மூன்று திரைப்படங்கள் இயக்கி பெரிய இயக்குனராக மாறியவர் அட்லி. ஷங்கரிடம் சினிமா கற்றுக்கொண்டவர். ஷங்கர் இயக்கிய எந்திரன், நண்பன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் உதவி இயக்குனராக வேலை செய்திருக்கிறார். ஷங்கரை போலவே அதிக பட்ஜெட்டுகளில் படமெடுக்கும் இயக்குனர் இவர்.

ராஜா ராணி: முதல் படமான ராஜா ராணி ஹிட் அடிக்கவே விஜயை வைத்து தெறி படத்தை இயக்கினார். விஜய் எப்படி மாஸாக காட்ட வேண்டும் என்பதை சரியாக புரிந்து கதை, திரைக்கதையை அட்லி எழுதியிருந்தார். அட்லி - விஜய் காம்பினேஷன் விஜய் ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்துப்போனது. அது விஜய்க்கும் பிடித்துப்போனதால் தொடர்ந்து அட்லியின் இயக்கத்தில் மெர்சல், பிகில் ஆகிய படங்களில் நடித்தார்.

ஒரு நடிகரை எப்படி காட்ட வேண்டும்? அவரிடம் அவரின் ரசிகர்கள் என்ன எதிர்பார்ப்பார்கள் என்பதை புரிந்துவைத்திருக்கும் இயக்குனராகவே அட்லீ வலம் வருகிறார். அதனால்தான் ஷாருக்கானே அவரை அழைத்து ‘என் படத்தை நீங்கள் இயக்குங்கள்’ என வாய்ப்பு கொடுத்தார்.

ஷாருக்கான் ஜவான்: அப்படி அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து உருவான ஜவான் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்து 1300 கோடி வரை வசூல் செய்தது. இதனால் பாலிவுட்டிலும் மோஸ்ட் வாண்டட் இயக்குனராக மாறியிருக்கிறார் அட்லி. ஜவான் படம் வெளியாகி ஒன்றரை வருடங்கள் ஆகிவிட்டது. ஆனாலும், அட்லியின் அடுத்த படம் பற்றி எந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை.

ரஜினிகாந்த்: ஊடகம் ஒன்றில் பேசிய அட்லியுடம் ‘ரஜினியுடன் எப்போது இணைவீர்கள்?’ என கேட்கப்பட்டது. அதற்கு பதில் சொன்ன அட்லி ‘எந்திரன் படம் உருவானபோது ரஜினி சாருடன் 300 நாட்கள் இருந்திருக்கிறேன். அவருக்கு என்னை தெரியும். இதுவரை மூன்று முறை அவரை சந்தித்து படம் பற்றி பேசியிருக்கிறேன். சரியான கதையும் நேரமும் கூடிவரவில்லை. நான் ஒரு நடிகருக்கு ஒரு படம் செய்தால் அது அவரின் சிறந்த படமாகவும், அதிக வசூலை பெற்ற படமாகவும் இருக்க வேண்டும் என நினைப்பேன்.

ரஜினி சாரை வைத்து பாட்ஷாவை விட ஒரு சிறந்த படத்தை கொடுக்க வேண்டும் என நினைக்கிறேன். இருவருக்கும் திருப்தியான கதை இன்னமும் அமையவில்லை. அது கண்டிப்பாக 100 சதவீதம் ஒருநாள் நடக்கும்’ என சொல்லியிருக்கிறார்.

Next Story