அண்ணா கொடுத்த சின்ன கேப்… தவறாகப் பயன்படுத்திய இயக்குனர்.. மெகா ஹிட்டை மிஸ் பண்ணிய ஏவிஎம்!

Published on: August 8, 2025
---Advertisement---

அண்ணாவின் எழுத்தில் கே.ஆர்.ராமசாமி நடித்த நாடகம்தான் ஓர் இரவு. அது தமிழகத்தில் சக்கை போடு போட்டுக்கொண்டு இருந்தது. அந்த நாடகத்தை ஏவி மெய்யப்ப செட்டியார் இயக்கினால் நல்லாருக்கும்னு எஸ்.பி.முத்துராமனின் தந்தை சுப்பையா நினைத்தார். அந்தக் கருத்தை ஏவி.மெய்யப்ப செட்டியாரிடம் தெரிவித்தார்.

அந்தப் படம் பார்த்த உடன் ஏவி.மெய்யப்ப செட்டியாருக்கும் பிடித்து விட்டது. அதனால் அந்தக் கதையைப் படமாக்கலாம் என முடிவெடுத்தார். அந்தக் கதையைப் படமாக்குவது பற்றிப் பேசுவதற்காக ஏவிஎம் ஸ்டூடியோவுக்கு வந்த அண்ணா அந்தக் கதைக்குக் கேட்ட தொகை வெறும் 10 ஆயிரம் ரூபாய்.

அந்தப் படத்துக்கு வசனம் எழுதும் பொறுப்பையும் அண்ணாவே ஏற்றுக் கொண்டார். இரவு 10 மணி அளவில் எழுத உட்கார்ந்த அவர் எந்த ஒரு அடித்தலும் திருத்தலும் இல்லாமல் 300 பக்கங்களுக்கு மிக நேர்த்தியாக எழுதி அந்தக் கதையை மறுநாள் காலையில் அந்த நிறுவனத்தின் இயக்குனராக பொறுப்பேற்றிருந்த ப.நீலகண்டனிடம் கொடுத்து விட்டார்.

‘இந்த கதையில் ஏதாவது மாற்ற வேண்டியது இருந்தால் நீயே மாற்றிக் கொள். இந்தப் படத்தையும் நீயே இயக்கலாம்’ என அண்ணா சொன்னார். அப்படி சொன்னதும் ஏவி.மெய்யப்ப செட்டியாரும் ப.நீலகண்டனையே அந்தப் படத்தின் இயக்குனர் ஆக்கினார்.

அந்தக் கதையில் என்ன வேணாலும் மாற்றிக் கொள்ளலாம்னு அண்ணா அனுமதி கொடுத்ததுதான் மிகவும் தவறாகப் போய்விட்டது. ஏன்னா ப.நீலகண்டன் கதையில் ஒரு சில மாற்றங்களைக் கொடுக்க நாடகத்தின் போது கிடைத்த வரவேற்பு திரைப்படமானதும் கிடைக்காமல் போனது.

1951ல் அண்ணாத்துரை கதை எழுத, ப.நீலகண்டன் இயக்கிய படம் ஓர் இரவு. ஆர்.சுந்தரம் இசை அமைத்துள்ளார். நாடகமாக இருக்கும்போது இந்தக் கதை சக்கை போடு போட்டது. அதே நேரம் படமானதும் வந்த சிறு தவறால் பிளாப் ஆனது. இதை ஏவிஎம் எப்படி கவனிக்காமல் விட்டார்கள் என்பதே கேள்விக்குறியாக உள்ளது.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment