Categories: latest news

இயக்குனரை மந்திரவாதியாகப் பார்த்த பாலுமகேந்திரா… அதுதான் அவரோட பவருக்குக் காரணமாம்!

கலைநயமிக்க பல திரைப்படங்களைத் தந்த பாலுமகேந்திரா பார்த்த முதல் படப்பிடிப்புன்னா அது தி பிரிட்ஜ் ஆன் தி ரிவர் க்வை என்ற படத்தைத் தான் பார்த்தார்.

இலங்கையில் அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்த போது அதைப் பார்க்கக்கூடிய வாய்ப்பு பாலுமகேந்திராவுக்கு அமைந்தது. அந்தப் படப்பிடிப்பில் இருந்த ஒருவருக்கு எல்லாரும் அதீத மரியாதை கொடுத்துக் கொண்டு இருந்ததை பாலுமகேந்திரா பார்த்தார். அவர் தான் அந்தப் படத்தின் டைரக்டர் என்று பேசிக்கொண்டார்கள். டைரக்டர்னா யாருன்னு அப்போது பாலுமகேந்திராவுக்குத் தெரியாது.

அந்த மனிதர் ஷாட் ரெடி டேக் போகலாமான்னு கேட்டார். ஓகேன்னு சொன்னாங்க. டேக் ஒன் டு த்ரீ ரெய்ன்னாரு. அந்த இடத்தில் மழை அடிக்க ஆரம்பித்தது. மழைக்கான அறிகுறியே அங்கு இல்லை. ரெய்ன்னு அவர் சொன்ன உடனே அங்கு மழை பெய்தது. இது பாலுமகேந்திராவுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தைத் தந்தது. சில நிமிடங்களுக்கு முன்னாடி அந்த மனிதர் கட் என்றார்.

மழை அப்படியே நின்று போனது. ஆச்சரியத்தில் ஒரு மந்திரவாதியைப் பார்ப்பது போல பாலுமகேந்திரா அவரைப் பார்த்தார். அந்த டவுசர் போட்ட மனிதரையே பார்த்துக் கொண்டு இருந்தார். டைரக்டர் என்பவர் எவ்வளவு முக்கியமானவர் என்பது பாலுமகேந்திராவுக்கு அன்றுதான் தெரிந்தது. பின்னாளில் மிகப்பெரிய இயக்குனர் அவர் ஆனதற்கு முதல் காரணம் அவர் பார்த்த அந்தப் படப்பிடிப்பு தருணம்தான். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

பாலுமகேந்திரா தான் கமல், ஸ்ரீதேவி நடித்த மூன்றாம் பிறை படத்தை இயக்கினார். இது தமிழ்த்திரை உலகில் அழுத்தமான கால்தடம் பதித்தது. இப்படி ஒரு படமா என பார்த்தவர்கள் அனைவரும் வியந்தனர். படத்தில் மனநிலை சரியில்லாதவராக ஸ்ரீதேவி அனாயாசமாக நடித்து இருந்தார். ஆனால் கிளைமேக்ஸில் கமல் சூப்பராக நடித்து விருதைத் தட்டிச் சென்றுள்ளார். இது 1982ல் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்துக்கு தேசிய விருது கிடைத்தது. கமலுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

7 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

8 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

9 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

10 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

10 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

17 hours ago