மணிவண்ணனுக்காக பாரதிராஜா விட்ட சவால்..ஜெயிக்க வைத்தது அந்தப் படம்தான்!

by sankaran v |
மணிவண்ணனுக்காக பாரதிராஜா விட்ட சவால்..ஜெயிக்க வைத்தது அந்தப் படம்தான்!
X

மணிவண்ணன் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். ஆனால் அதற்கு அவர் என்ன செய்தார் தெரியுமா? கோவையில் பெரிய அரிசி வியாபாரியும், அரசியல்வாதியுமான டிஎஸ்.மணியனின் மகனாகப் பிறந்தவர்தான் மணிவண்ணன். அங்கு காலேஜ் படிக்கும்போதே கிழக்கே போகும் ரயில் படத்தைப் பார்த்தாராம்.

16 பக்கக் கடிதம்: அப்புறம் பாரதிராஜாவுக்கு 16 பக்கத்துக்குக் கடிதம் எழுதினாராம். அதைப் படித்ததும் பாரதிராஜா உடனே அவரை தனக்கு உதவியாளராக சேர்த்துக் கொண்டாராம். நிழல்கள் படத்துக்கு மணிவண்ணன்தான் கதை சொன்னாராம்.

படத்தில் இளையராஜா இசையில் ஒரு பாடலே எழுதினாராம். அதுதான் மடைதிறந்து பாடல். ஆனால் தன் பெயர் வர வேண்டாம். வாலி பெயரைப் போடுங்கன்னு சொன்னாராம் மணிவண்ணன். அவர் வர தாமதம் ஆனதால்தான் அந்தப் பாடலை எழுதியுள்ளார்.

நண்பர்களிடம் சவால்: அந்தப் படம் எதிர்பார்த்த அளவில் வெற்றியைக் கொடுக்கவில்லை. அதனால் மணிவண்ணனை வைத்து ஒரு வெற்றிப் படத்தைத் தந்தே தீருவேன் என பாரதிராஜா தன் நண்பர்களிடம் சவால் விட்டாராம். அதன்படி அவர் கொடுத்த படம்தான் அலைகள் ஓய்வதில்லை. அந்தப் படத்துக்கு வசனம் எழுதியது மணிவண்ணன்தான். அவர்தான் கதையும் எழுதியுள்ளார்.

அலைகள் ஓய்வதில்லை: படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. அலைகள் ஓய்வதில்லை படத்தில் கார்த்திக் ராதாவை வர்ணிக்கும் இடத்தில் அருமையாக வசனத்தை எழுதி இருந்தார் மணிவண்ணன். அதே போல காதல் ஓவியம் படத்துக்கும் அவர்தான் வசனம் எழுதியுள்ளார்.

1981ல் பாரதிராஜா இயக்கத்தில் ராதா, கார்த்திக் நடித்த சூப்பர்ஹிட் படம் அலைகள் ஓய்வதில்லை. இந்த இருவருமே இந்தப் படத்தில்தான் அறிமுகம். மணிவண்ணன் கதை, வசனம் எழுதியுள்ளார். இளையராஜாவின் இசையில் பாடல்கள் அருமை. தியாகராஜன், சில்க், கமலா காமேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். ஆயிரம் தாமரை, தரிசனம் கிடைக்காதா, காதல் ஓவியம், புத்தம் புது காலை, சரிகமப, வாடி என் கப்ப கிழங்கே, விழியில் விழுந்து உள்பட பல சூப்பர்ஹிட் பாடல்கள் உள்ளன.

Next Story