கங்கை அமரன் அதுக்கு லாய்க்கில்லை… பாக்கியராஜை ‘டிக்’ அடித்த பாரதிராஜா

Published on: March 18, 2025
---Advertisement---

இயக்குனர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் கே.பாக்கியராஜ். அவர் இயக்கிய படங்களில் ஒரு சில காட்சிகளில் தலைகாட்டி விட்டுப் போவார். அவர் எழுதும் வசனமும் பாரதிராஜாவுக்கு மிகவும் பிடிக்கும். பாரதிராஜா சொந்தப் படம் ஒன்றை எடுத்தார். அதுதான் புதிய வார்ப்புகள்.

அதற்கு வசனம் எழுதிக் கொண்டு இருந்தார். படத்தின் ஹீரோயின் ரதி என்று தேர்வு செய்து விட்டார். ஆனால் ஹீரோவுக்கு யாரைப் போடலாம் என்று யோசித்தார். அவரோ புதுமுகத்தை நடிக்க வைக்கலாம் என்று நினைத்தார்.

கங்கை அமரன்: அதற்காக அவர் முதலில் இளையராஜாவின் சகோதரர் ஆன கங்கை அமரனைத் தான் தேர்வு செய்தார். ஆனால் என்ன காரணத்தாலோ அவர் தேர்வாகவில்லை. அதன்பிறகு அவர் பலரையும் பார்த்தார். ஆனால் யாருமே அவருடைய கேரக்டருக்குப் பொருத்தமாக இல்லை.

கடைசியில் தனது யூனிட்டில் இருந்த பாக்கியராஜைப் பார்த்தார். அவருக்கு கண்ணாடி போட்டால் எப்படி இருக்கும் என்று நினைத்தார். அதன்படி போட்டுப் பார்த்து விதவிதமான ஆங்கிளில் அவரைப் போட்டோ எடுத்துப் பார்த்தார். கடைசியில் அவரையே தேர்வு செய்தார் பாரதிராஜா.

பாரதிராஜா: இதுல என்ன விசேஷம்னா முதலில் பாக்கியராஜ் சென்னைக்கு வந்ததே நடிக்கணும்கற ஆசையில்தானாம். அந்த வாய்ப்பு கிடைக்காததால் தான் உதவி இயக்குனராக பணியாற்றினாராம். அப்படியே கிடைத்த சில எடுபிடி வேடங்களிலும் நடித்துள்ளார். அதன்பிறகு அவரை ஒரு சூப்பர் ஹீரோவாக வார்த்து எடுத்தது பாரதிராஜாவின் புதிய வார்ப்புகள்தான்.

சண்முகமணி: அந்த வகையில் இயக்குனர் இமயத்தின் தேர்வு என்றைக்குமே சோடை போனதில்லை என்பதை இவரும் நிரூபித்து விட்டார். படத்தில் சண்முகமணி என்ற வாத்தியராக வரும் பாக்கியராஜ் ரசிகர்களின் மனதில் நிலைத்து விட்டார். அப்படியே அவரது நடிப்பு தத்ரூபமாக இருந்தது. அதன்பிறகு என்ன அவருக்கு ஏறுமுகம்தான்.

புதிய வார்ப்புகள்: 1979ல் ஆர்.செல்வராஜ் எழுதிய கதையை பாரதிராஜா இயக்கியுள்ளார். அதுதான் புதிய வார்ப்புகள். பாக்கியராஜ், ரதி, கவுண்டமணி, மனோபாலா, ஜனகராஜ், சந்திரசேகர் உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜாவின் இசையில் அத்தனை பாடல்களும் சூப்பர்ஹிட். வான் மேகங்களே, இதயம் போகுதே, தம்தன தம்தன, திருவிழா கூத்து ஆகிய பாடல்கள் உள்ளன.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment