ரஜினியின் முதல் காதலை அசை போட்ட பிரபலம்... கதறி அழுத சூப்பர்ஸ்டார்!

by sankaran v |
ரஜினியின் முதல் காதலை அசை போட்ட பிரபலம்... கதறி அழுத சூப்பர்ஸ்டார்!
X

மிருகக் குணத்தில் உள்ள மனிதனையும் மன்மதனாக மாற்றும் வல்லமை காதலுக்கே உண்டு. அது உலகின் மகத்தான சக்தி. உயிர்களிடம் ஒரு புத்துணர்வைத் தருகிறது. அந்த வகையில் முதல் காதலை வாழ்க்கையில் யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விட முடியாது.

மனிதனாகப் பிறந்த எல்லாருக்குமே இந்தக் காதல் ஒருமுறையேனும் மனதில் எங்காவது ஒரு மூலையில் அரும்பி விட்டுப் போகும். இதற்கு யாரும் விதிவிலக்கல்ல. ஆனால் யாரும் என்ன நினைத்துக் கொள்வார்களோ என்று வெளியே சொல்ல மாட்டார்கள்.

முதல் காதல்: அந்த வகையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கும் முதல் காதல் இருந்துள்ளது. இது பலரும் அறியாத தகவல்தான். அது எப்படி வந்தது? என்ன ஆனதுன்னு பிரபலம் ஒருவர் சொல்கிறார். வாங்க பார்க்கலாம்.சினிமாவுக்குள் அடி எடுத்து வைப்பதற்கு முன் ரஜினிகாந்த் பஸ் கண்டக்டராக வேலை பார்த்துள்ளார்.

நாடகம்: ஒரு சமயம் ஒரு பெண்ணை பார்த்துள்ளார். அது காதலாக மலர்ந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் நேசிக்க ஆரம்பித்தனர். ஒருநாள் என்னோட நாடகம் நடக்கிறது. வந்து பார்னு சொன்னாராம் ரஜினி.

பிலிம் இன்ஸ்டிட்யூட்: அந்தப் பெண்ணும் பார்க்கப் போனாராம். ரஜினியின் நடிப்பைப் பார்த்து அப்படியே ஷாக்காகி விட்டாராம். தொடர்ந்து ஒரு பிலிம் இன்ஸ்டிட்யூட்ல சேருங்கன்னு ரஜினியைக் கட்டாயப்படுத்தினாராம். இதனால் ரஜினியும் சேர்ந்துள்ளார். ஆனால் அங்கு போய் சேர்ந்து படிக்க அவரிடம் பணம் இல்லை. என்ன செய்வதுன்னு யோசிக்க ஆரம்பிச்சிருக்காரு. உடனே அந்தப் பெண்ணே அவருக்குப் பணம் கொடுத்து உதவினாராம்.

கதறி அழுத ரஜினி: அதே நேரம் அவள் திடீரென ரஜினியோட வாழ்க்கையில இருந்து காணாமல் போனாராம். ரஜினியும் அவளைத் தேடி கதறி அழுதாராம். நான் வாழ ஒரே காரணம் அவள்தான். ஒரு தடவையாவது பார்க்க வேண்டும் என்று நினைத்து தன் நண்பர் பிரபல மலையாளத் திரை உலகின் இயக்குனர், நடிகர் ஸ்ரீனிவாசனிடம் சொல்லி இருக்கிறார். இதுகுறித்து ஸ்ரீனிவாசன் பேட்டியில் ரஜினியின் முதல் காதல் பற்றிய பல நினைவுகளை அசைபோட்டுள்ளார்.

Next Story